#IPL2022 “கிரிக்கெட் தொடரில் இன்றை போட்டியிலாவது  ஐதராபாத் அணியை வீழ்த்தி, CSK முதல் பெற்றி பெறுமா” என்று, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதால், இன்றைய போட்டியானது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

#IPL2022 15 வது சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் 2 போட்டிகள் நடைபெறுகிறது.

இதில், இன்றைய தினம் முதலில் நடைபெறும் 17 வது லீக் போட்டியில், #CSK vs #SRH அணிகள் மோதின. 

இரு அணிகளுமே இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றியை கூட பெறாமல், தொடர் தோல்விகளால் போராடி வருகிறது.

அதாவது, 15 வது #IPL2022 கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் என்கிற ஒரு அந்தஸ்துடன் களம் இறங்கி இருக்கும் #CSK சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, இந்த சீசனில் தான் எதிர்கொண்ட முதல் 3 போட்டிகளிலும் கொல்கத்தா, லக்னோ, பஞ்சாப்புக்கு எதிராக என தொடர்ந்து வரிசையாக தோல்வியடைந்து வருகிறது.

இதற்கு முன்பு இருந்த #CSK அணியானது எந்த #IPL தொடரிலும், இவ்வளவு மோசமாக விளையாடியது இல்லை.

 #CSK தொடர் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா #CSK அணியை வெற்றிப் பாதைக்கு திருப்ப வேண்டிய மிக முக்கியமான கட்டத்தில், அதே நேரத்தில் ஒரு நெருக்கடியான கட்டத்தில் தடுமாறி நிற்கிறது.

அத்துடன், புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜாவுக்கு, #CSK அணிக்காக இன்றைய தினம் அவர் 150 வது போட்டியில் களமிறங்குகிறார்.

அதே போல், கடந்த #IPL2021 சீசனில் 635 ரன்கள் சேர்த்து ஆரஞ்சு நிற தொப்பியை பெற்ற தொடக்க இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், இந்த சீசனில் முற்றிலுமாக தடுமாறி ஆட்டம் கண்டு வருகிறார். இதுவரை அவர் விளையாடி 3 போட்டியிலும் அவர் அடித்த ரன்கள் மொத்தமே 2 மட்டுமே ஆகும்.

என்றாலும், ருதுராஜ் கெய்க்வாட்க்கு அணியில் ஓரங்கட்டாமல்  #CSK அணி, அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்து வருகிறது. 

அதே போல், கடந்த சீசனில் அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, மொயீன் அலி, ஜடேஜா, பிராவோ ஆகியோர் ஓரளவுக்கு சற்று சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்திருந்தாலும், இன்னும் அவர்களுக்கு வேகம் தேவை என்கிற நிலை உருவாகி உள்ளது.

குறிப்பாக, முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசனில் ஓரளவுக்கு நல்ல ஃபார்மிற்கு திரும்பி உள்ளது, ஓரளவுக்கு ஆறுதலை தருகிறது.

காயம் காரணமாக, தீபக் சாஹர் காயத்தால் ஓய்வில் இருக்கும் நிலையில். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே, இன்றைய போட்டியில் களம் காண அதிக வாய்ப்பு உள்ளது. 

குறிப்பாக, இன்றைய போட்டியில் இளம் புயல் ராஜ்வர்தன் ஹங்ரேக்கார் அறிமுக அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், இன்றைய போட்டியானது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், கேன் வில்லியம்சன் தலைமையிலான #SRH  ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, தான் எதிர்கொண்ட இரு போட்டியிலும் தோல்வியை தழுவியது. இஅதனால், இன்றைய போட்டியில் எப்படியும் வெற்றிப் பெற வேண்டிய கட்டாயத்தில் அந்த அணியும் இருக்கிறது. 

#SRH அணியை பொறுத்தவரையில், பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தர் என்று சிறப்பாக செயல்படக்கூடியவர்கள் வரிசையாக இருக்கிறார்கள்.

இப்படியாக,  #CSK vs #SRH அணிகளும் இதுவரை 16 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில், 12 ஆட்டங்களில்  #CSK அணியும், 4 ஆட்டங்களில் #SRH ஐதராபாத்து அணியும் வெற்றி பெற்று உள்ளன.

என்றாலும், இன்றைய போட்டியானது ரசிகர்களுக்கு கண்டிப்பாக விருந்து படைக்கும் என்றே கணிக்கப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில், இன்று இரவு நடைபெறும் மற்றொரு போட்டியில் பெங்களூரு - மும்பை அணிகள் மோது விளையாடுகிறது.