நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்ததும் பிரதமர் மோடியை, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி சந்தித்து பேசியது, தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவை - மாநிலங்களவை என இரு அவைகளும் நாளையுடன் இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தான், முன்கூட்டியே இன்றைய தினமே பட்ஜெட் கூட்டத் தொடரானது முடித்துக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, நாடாளுமன்றத்தில் இரு அவைகளும், மறு தேதி குறிப்பிடாமல் தற்போது ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 வது அமர்வில், மத்திய பட்ஜெட் மற்றும் அது குறித்தான நிதி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 

இவற்றுடன், இன்னும் சில முக்கிய சட்டத் திருத்த மசோதாக்களும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளன. 

அதில், குறிப்பிடும்படியாக குற்றவியல் நடைமுறை, டெல்லி மாநகராட்சி மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் முக்கிய இடம் பெற்றன.

இப்படியாக, “இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 வது அமர்வில், அனைவரின் பங்கேற்புடன் செயல்பாடு 129 சதவீதமாக இருந்தது” என்று கூறப்படுகிறது. 

அத்துடன், “8 வது அமர்வு வரை செயல்பாடு 106 சதவீதம் இருந்ததும் என்றும், இதற்கு முந்தைய அனுபவங்களுடன் தற்போது ஒப்பிடுகையில், அனைவரின் ஆதரவுடன் தற்போது நடைபெற்று வரும் கூட்டத் தொடர் சிறப்பாக நடைபெற்றது” என்றும், என மக்களவை சபாநாயகர் ஓம். பிர்லா கூறியுள்ளார். 

அதே போல, இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் மாநிலங்களவையின் செயல்பாடானது, 99.8 சதவீதம் என்ற அளவில் இருந்து உள்ளது” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இப்படியாக, பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 வது அமர்வு இன்றுடன் முடிவடைந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்ததும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

அவருடன், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சியின் மூத்த முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட பிற கட்சிகளின் தலைவர்களையும் பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் சந்தித்துப் பேசினார். 

இப்படி, பல்வேறு கட்சித் தலைவர்களும் பிரதமர் மோடியை சந்திக்கும் போது, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ஆனால், இந்த சந்திப்பின்போது “என்ன பேசப்பட்டது?” என்பது குறித்த செய்திகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடியை, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேரில் சந்தித்து பேசியது, தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.