தமிழகத்தின் முன்னணி தொழில் நிறுவனத்தின் நிறுவனரான லெஜண்ட் சரவணன் தமிழக மக்கள் மத்தியில் மிகப் பிரபலம். தனது  நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் தானே நடித்து இன்று பல தொழில் நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு அதன் உரிமையாளர்கள் நடிக்கும் ட்ரெண்டை ஆரம்பித்தவர் லெஜண்ட் சரவணன் தான்.

வழக்கமாக விளம்பரங்களில் மாடல்களும், திரைப்பட நடிகர்-நடிகைகளுமே நடித்து வந்த ட்ரெண்டை மாற்றிய லெஜண்ட் சரவணன் மீது எத்தனையோ எதிர்மறை விமர்சனங்கள் வீசப்பட்ட போதும் தொடர்ந்து விளம்பரங்களில் நடித்து எதிர் வந்த விமர்சனங்களைத் தவிடுபொடியாக்கிய லெஜண்ட் சரவணன் அடுத்ததாக தமிழ் திரையுலகில் நடிகராக எடுத்தார்.

தி லெஜன்ட் திரைப்படத்தின் மூலம் லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். முன்னதாக அஜித் குமார் & சீயான் விக்ரம் இணைந்து நடித்த உல்லாசம் மற்றும் த்ரில்லர் திரைப்படமான விசில் ஆகிய திரைப்படங்களை இயக்கிய தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஜோடியான இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து லெஜண்ட் சரவணன் நடிக்கும் தி லெஜன்ட் படத்தை இயக்கியுள்ளனர்.

தி லெஜன்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடிக்கும் தி லெஜன்ட் படத்தில் லெஜண்ட் சரவணன் உடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், பிரபு, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர் & மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

வேல்ராஜ் ஒளிப்பதிவில் தி லெஜன்ட் படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தி லெஜன்ட் திரைப்படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் வருகிற ஏப்ரல் 9- தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.