லைட்ஸ்...கேமரா...டான்ஸ்...டக்கராக தொடங்கிய தளபதி 66 ஷூட்டிங் !
By Aravind Selvam | Galatta | April 07, 2022 17:21 PM IST
தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்திகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் தயாராகியுள்ள பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் படம் தளபதி 66.
தோழா,மஹரிஷி போன்ற வெற்றி படங்களை இயக்கிய வம்சி பைடிபைலி இந்த படத்தினை இயக்குகிறார்.ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.சரத்குமார் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி வைரலாகி வந்தன.
தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது என்று தமன் ஒரு ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.அவர் பதிவிட்டுள்ள புகைப்படம் மூலம் இது பாடல் ஷூட்டிங்காக இருக்கலாம் என்று தெரிகிறது.அடுத்தடுத்த அப்டேட்களால் விஜய் ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர்.
What a Highhhhh 🧸♥️ at #Thalapathy66 Shoot today .
— thaman S (@MusicThaman) April 6, 2022
Wishing My dear brother @directorvamshi All the very Best 💪🏼🎵❤️ The First Shot ON Our @actorvijay anna Was Mind Blowingggggggg 💥💥💥 🏆💣 . @Lyricist_Vivek thanks for the amazing writings dear brother .
God bless !! pic.twitter.com/aHPxevHHoM