தமிழ் திரை உலகில் பல பிளாக்பஸ்டர் என்டர்டெய்னிங் திரைப்படங்களை கொடுத்து தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் இயக்குனர் சுந்தர்.C . குறிப்பாக சுந்தர்.C இயக்கத்தில் வெளிவந்த கலகலப்பு மற்றும் அரண்மனை சீரிஸ் திரைப்படங்கள் சினிமா ரசிகர்களின் மோஸ்ட் ஃபேவரட் காமெடி திரைப்படங்களின் பட்டியலில் இடம்பெறும்.

அந்தவகையில் கடைசியாக சுந்தர்.C இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 3 திரைப்படமும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் ஹாரர் காமெடி திரைப்படமாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வரும் சுந்தர்.C நடிப்பில் வல்லான், தலைநகரம் 2, ஒன் 2 ஒன் ஆகிய திரைப்படங்கள் விரைவில் ரிலீசாக தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் சுந்தர்.C மற்றும் நடிகர் ஜெய் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பட்டாம்பூச்சி. இயக்குனர் பத்ரி நாராயணன் எழுதி இயக்கியுள்ள பட்டாம்பூச்சி திரைப்படத்தில் ஹனிரோஸ் வர்கீஸ் மற்றும் இமான் அண்ணாச்சி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். AVNI டெலி மீடியா சார்பில் குஷ்பூ சுந்தர் பட்டாம்பூச்சி திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

இசக்கி கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில், நவநீத்.S இசையமைத்துள்ள பட்டாம்பூச்சி திரைப்படத்திற்கு ஃபின்னி ஆலிவர்.S படத்தொகுப்பு செய்துள்ளார். வருகிற மே மாதம் பட்டாம்பூச்சி திரைப்படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பட்டாம்பூச்சி திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. அந்த மோஷன் போஸ்டர் இதோ…