விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.விஜய் டிவியின் நம்பர் 1 தொடராக இந்த தொடர் இருக்கிறது.அருண் மற்றும் வினுஷா தேவி இந்த தொடரின் முன்னணி வேடங்களில் நடித்து வருகின்றனர்.

ரூபாஸ்ரீ,பரினா,அருள்ஜோதி,சுகேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த தொடரில் நடித்து வருகின்றனர்.750 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடரில் அவ்வப்போது சில மாற்றங்கள் சில காரணங்களால் நடைபெற்று வருகிறது.

என்னதான் மாற்றங்கள் நடந்தாலும் கதையின் விறுவிறுப்பு குறையாமல் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் ஆக கொண்டு செல்கின்றனர்.இந்த தொடரில் நடித்து வரும் நட்சத்திரங்களுக்கென்று பெரும் ரசிகர் பட்டாளங்கள் உள்ளன.

பல திருப்பங்களுடன் நகர்ந்து வரும் இந்த தொடரின் விறுவிறுப்பை கூட்டும் படி தற்போது ஒரு புது என்ட்ரி சீரியலில் இணைந்துள்ளார்.பல சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து பிரபலமான பரத் மோகன் இந்த தொடரில் இணைந்துள்ளார்.இவரது எபிசோடுகள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.

bharathi kannamma serial bharath mohan new entry arun vinusha devi farina

bharathi kannamma serial bharath mohan new entry arun vinusha devi farina