டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில், “மு.க.ஸ்டாலின் கலந்துகொண்ட டீ பார்ட்டியும் - டின்னர் பார்ட்டியும்” பாஜகவுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

டெல்லியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த சில நாட்களுக்கு முன்பு திறந்து வைத்தார்.

கோலாகலமாக நடைபெறும் திறப்பு விழாவில், மத்திய அமைச்சர்கள், சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்பட பல கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மிக முக்கியமாக, இந்த திறப்பு விழாவிற்கு திமுக தலைமை எதிர்பார்த்தது போலவே, காங்கிரஸ் தலைவர் சோனியா உடன், அகிலேஷ் யாதவ், உமர் அப்துல்லா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். 

அதே போல், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அந்தக் கட்சியின் மூத்த எம்.பி, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் சார்பில் நாடாளுமன்ற குழுத் தலைவர் உள்ளிட்டவர்கள் இந்த திறப்பு விழாவில் கலந்துக்கொண்டனர்.

இந்த விழாவில், “கருணாநிதி ஏ லைஃப்” என்ற நூலை இந்து என்.ராம் வெளியிட சோனியா காந்தி பெற்றுக் கொள்கிறார். பேராசிரியர் ஜெயரஞ்சன் எழுதிய “ஏ திராவிடன் ஜார்னி” என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பெற்றுக் கொண்டார். 

அத்துடன், இந்த விழாவை முன்னிட்டு, முன்கூட்டியே மூன்று நாள் பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து, தமிழக நலனுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

இதை தொடர்ந்து, திமுகவின் தலைமை அலுவலக கட்டிட விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும், அன்றைய தினம் தேநீர் விருந்து வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையிலும், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி முன்னிலையிலும் நடைபெறுகிறது என்றும், அப்போது செய்திகள் வெளியானது.

முன்னதாக, இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி இருப்பதைப் போன்று, அகில இந்திய அளவில் கொள்கை அளவிலான கூட்டணியை காங்கிரஸ் கட்சி வலுப்படுத்த வேண்டும்” என்று, வலியுறுத்தினார்.

மேலும், “தேசிய அளவில் பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் எல்லாம் ஓர் அணியில் திரள வேண்டும்” என்று, இந்தியாவின் தலைநகரில் நின்றுக்கொண்டு, மு.க. ஸ்டாலின் நெஞ்சம் நிமிர்த்தி பேசிய காருத்துக்கள் யாவும், இந்திய அளவில் எதிரொலித்தன.

இது பாஜகவால் அதிகம் கவனிப்பட்டது என்றாலும், பாஜகவிற்கு சற்றே கோபத்தை ஏற்படுத்தியது என்றும் செய்திகள் வெளியானது.

அத்துடன், தேசிய அளவில் கடந்த காலங்களில் காங்கிரஸ் பலமாக இருந்த நிலையில், தற்போது பாஜக பலமாக திகழ்கிறது. இதனால், பல மாநில கட்சிகளும், டெல்லி பக்கம் தங்களது கவனத்தை திருப்ப தொடங்கி இருக்கின்றன.

அப்படியான ஒரு பார்வைதான்,  “திமுகவின் தலைமை அலுவலக கட்டிட விழாவை முன்னிறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கொண்டார் என்றும், பாஜக டெல்லி மேலிடம் கவனத்தில் எடுத்துக்கொண்டது.

முக்கியமாக, “டெல்லியில் உள்ள திமுக அலுவலகத் திறப்பு விழாவை முன்வைத்து, எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க திமுக நினைத்து, செயல்பட்டதும், அதன் தொடர்ச்சியாக அன்றை இரவு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில், தேநீர் விருந்து மற்றும்  டின்னர் பார்ட்டியும்” நடந்ததையும், பாஜகவுக்கு தற்போது புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளதாகவும், டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, டெல்லி அரசியல் களத்தில் இதற்கு முன்பாக நடைபெற்ற டீ பார்ட்டி - டின்னர் பார்ட்டிளும், பல்வேறு மாற்றங்களைக் கடந்த காலங்களில் முக்கிய பங்கு ஆற்றிருப்பதையும், டெல்லி மேலிடம் கவனத்தில் கொண்டிருக்கிறது.

இப்படியாக, கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியுடன் இந்தியாவின் அனைத்து எதிர்கட்சிகளும் சந்திக்க ஒரு பொன்னான வாய்ப்பை திமுக ஏற்படுத்தி கொடுத்ததோடு, அன்றைய இரவுக்கு  “டீ பார்ட்டியும் - டின்னர் பார்ட்டியும்” நடந்தியதில், பல முக்கிய விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்றே கூறப்படுகிறது. இப்படி, இந்தியாவின் எதிர் கட்சிகள் யாவும் ஒரே அணியாக திரண்டு நிற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மையமாக அமைந்துள்ளது, பாஜக தலைமைக்கு சற்ற கோபத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.