உடல் நிலை காரணமாக அரசியலுக்கு வர முடியாது என்று திடீர் அறிவிப்பை கொடுத்தார். இது குறித்து கருத்து தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், “ ரஜினியின் முடிவு சற்று ஏமாற்றமாக இருந்தாலும், அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம். சென்னை வந்தவுடன் அவரை சந்திப்பேன். அவரது ரசிகர்கள் மனநிலைதான் எனக்கும். என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் அவர் ஆரோக்யத்துடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார். 


இந்நிலையில், ’’ திராவிடம் யாருக்கும் சொந்தம் இல்லை.திராவிடம் அனைவருக்கும் பொதுவானது. எனக்கும் ஆன்மீகத்திற்கு  விரோதம் கிடையாது. ஆன்மிகத்தை யாரு மீது திணிக்க முடியாது. பகுத்தறிவை ஏற்றுக்கொள்ளுமாறு நானும் யாரையும் நிர்பந்திக்க முடியாது. சென்னை சென்றதும் ரஜினியை சந்திப்பேன். தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன். ” என்று தெரிவித்தார்.