முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 99 வது பிறந்த நாள் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருவதை முன்னிட்டு, வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கு கலைத்துறை வித்தகர் விருதும், கலைஞர் எழுதுகோல் விருதினை மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவித்து உள்ளார்.

“கருணாநிதி, நவீன தமிழகத்தின் தந்தை!” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வர்ணித்து பேசினார். மகனாக அவர் தந்தை புகழ் பாடினாலும், தமிழக அரசியல் வரலாற்றை திரும்பிப் பார்க்கையில் அதுதான் உண்மையும் கூட.

சமூக நீதி அரசியலை முன்னிறுத்தியது, கை ரிக்சாவை ஒழித்தது, சமத்துவபுரம் கண்டது என்று ஒரு பக்கம் கள அரசியல் என்றால், மற்றொரு பக்கம் தனது பேனாவால் தமிழ் திரையுலகில் ஆட்சி அமைத்தது என்று, நீண்ட நெடியது கலைஞரின் தமிழும், தமிழ் பற்றும், தமிழை கொண்டே ஆட்சி அமைத்த அதன் அரசியல் பயணம் மிக பெரியது. 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.

சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது  திருவுருவச்சிலைக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார். அதன் தொடர்ச்சியாக, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்து உள்ள கலைஞரின் திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, கலைஞரின் முழு உருவ சிலைக்கு ட்ரோன் மூலம் மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, முரசொலி அலுவலகம், சி.ஐ.டி. காலணியிலும் கலைஞரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சற்று முன்னதாக மரியாதை செலுத்தினார்.

அத்துடன், ஏற்கனவே சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவித்தது போலவே, இன்று கலைஞரின் 99 வது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட வருகிறது.

மேலும், கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு, திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கு, “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆரூர்தாஸின் வீட்டிற்கே நேரில் சென்று விருதை வழங்கினார். 

அதே போல், கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருதானது, மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனு வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கௌரவித்தார்.

அதாவது, தலைமைச் செயலகத்தில் இளைஞர் துறையில் சமூக மேம்பாட்டிற்காக பங்காற்றி வரும் சிறந்த இதழாளருக்கு ஆண்டு தோறும் “கலைஞர் எழுதுகோல் விருது வழங்குவதுடன், 5 லட்சம் ரூபாய் பரிசு தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

அதன் படி தான், இன்றைய தினம் 2021 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதினை பெறுவதற்காக பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் தேர்வு செய்யப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக, தமிழறிஞர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்வில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆ.ராசா எம்.பி. உள்ளிட்ட பல்வேறு திமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும் கலைஞரின் உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இவர்களைப் போலவே, தமிழகம் முழுவதும் திமுகவிர் கலைஞரின் பிறந்தநாளை பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி, உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.