மனைவியின் ஆபாச படங்களை தனது மாமனாருக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி வைத்து விசித்திரமான முறையில் அவரது கணவன் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வரும் அமுதா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்ற பெண்ணின் கணவர் சரவணன் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) அந்த பகுதியில் கம்ப்யூட்டர் என்ஜினியராக பணியாற்றி வந்தார்.

இவர்கள் இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ஐஐடியில் படிக்கும் போது, ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு, தம்பதிகளான இவர்கள் இருவரும் பெங்களூருவில் கம்ப்யூட்டர் என்ஜினியராக பணியில் சேர்ந்து அங்கேயே வசித்து வந்தனர்.

ஆனால், இவர்களுக்கு திருமணமான அடுத்த 3 மாதங்களிலேயே அந்த பெண்ணுக்கு, அவரது கணவனே மிகவும் விசித்திரமான முறையில் பாலியல் தொல்லை கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்.

அதாவது, தனது மனைவி என்றும் பார்க்காமல், அந்த பெண்ணை மிகவும் ஆபாசமாக படங்கள் எடுத்து, அதனை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி விடுவேன்” என்று, என் கணவன் என்னை தொடர்ந்து மிரட்டி வருவதாக, அவரது மனைவி பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். 

இதனால், கணவருடன் வாழ பிடிக்காமல் அந்த பெண் பிரிந்து சென்று அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

பின்னர், 2 வீட்டு பெற்றோரும் இருவரையும் சமாதானம் செய்து ஒன்றாக சேர்த்து வைத்து வாழ வைத்தனர். 

பின்னர், “கடந்த 2016 ஆம் ஆண்டு, மீண்டும் எனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், என்னை ஆபாச படம் எடுத்து என்னை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும்” மீண்டும் அந்தப் பெண், தன் கணவர் மீது குற்றம் சாட்டினார். 

அதன் தொடர்ச்சியாக, “எனது கணவருடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை” என்று கூறிவிட்டு, மீண்டும் தனது பெற்றோர் வீட்டுக்கே அந்த பெண் திரும்பிச் சென்றிருக்கிறார்.

இதனையடுத்து, தனது கணவன் மீது அந்த பெண் பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த கணவனை அழைத்து விசாரணை நடத்தி, அவரை கைது செய்தனர்.

இந்த விசாரணைக்குப் பிறகு, இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றம் சென்றது. நீதிமன்றத்தில் அந்த பெண் சார்பில் தாக்கல் செய்த மனுவில், “எனது ஆபாச புகைப்படங்களை தனது தந்தைக்கும், நண்பர்களுக்கும் எனது கணவர் அனுப்பி வைத்திருக்கிறார்” என்றும், அந்த பெண் பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார். இந்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு சென்றது. 

இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், “மனைவி என்றும் பார்க்காமல், மனைவிக்கு விசித்திரமான முறையில் பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமல்லாமல், மனைவியின் ஆபாசப் புகைப்படங்களை மாமனாருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி வைத்திருப்பது கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாது செயல்” என்று, நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

மேலும், “இந்த வழக்கில் போலீசார் முறையான விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது போல் தெரிகிறது என்றும், இதனால் சம்மந்தப்பட் அந்த கணவன் மீது கூடுதல் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்றும், நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.