தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சிகளான சன் மியூசிக், சன் டிவி மற்றும் விஜய் டிவி உள்ளிட்ட பல சேனல்களில் முன்னணி தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய மணிமேகலை விஜய் டிவியில் ரசிகர்களின் ஃபேவரட்டான நிகழ்ச்சி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொடர்ந்து கலக்கி வருகிறார்.

முன்னதாக மணிமேகலை மற்றும் அவரது கணவர் ஹுஸைனின் விலை உயர்ந்த பைக் சில நாட்களுக்கு முன்பு திருடு போனது. இது குறித்து மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொலைந்து போன பைக்குடன் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, 

“எங்களது பைக் இன்று அதிகாலை அசோக் நகர் பகுதியில் திருட்டு போனது… திருமணத்திற்கு பிறகு கஷ்டப்பட்டு சம்பாதித்து ஆசையாக வாங்கிய முதல் பைக்… வருஷத்துக்கு ஒரு சம்பவம் எங்கிருந்துதான் வருதோ!!” என தெரிவித்து, “KTM RC 200 TN 10 BJ 470” என பைக் எண்ணைக் குறிப்பிட்டு, “தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது… திரும்ப கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஹுசைனின் பிறந்தநாள் பரிசாக தற்போது மீண்டும் மணிமேகலை-ஹுசைன் தம்பதியினர் புதிய பைக் வாங்கியுள்ளனர். BMW G 310 GS எனும் உயர்ரக புதிய பைக்கை வாங்கியுள்ள மணிமேகலை மற்றும் ஹூசேன் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பைக்குடன் இருக்கும் புகைப்படத்தையும் வீடியோவையும் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ இதோ…