ஜோசியம் பார்க்கப்போன சிறுமியை, போலி சாமியார் ஒருவர் தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில், சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவாவில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கோவாவில், சுமார் 50 வயது மதிக்கதக்க நபர் ஒருவர், ஜோசியம் பார்த்து வந்தார். 

ஜோசியத்துடன், அவர் பலருக்கும் குறி சொல்லி, ஆசியும் வழங்கி வந்தார். இப்படியாக, அவரைப் பார்க்க நாள்தோறும் அதிக அளவிலான மக்கள் வந்து சென்றனர்.

இந்த சூழலில் தான், அந்த 50 வயதான சாமியாரிடம் அந்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது 14 வயது மகளை அழைத்துக்கொண்டு ஜோசியம் பார்க்கச் சென்றிருக்கிறார்.

அப்போது, அந்த 14 வயது சிறுமியின் ஜாதகத்தை பார்த்த அந்த சாமியார், “சிறுமிக்கு தோஷம் இருக்கிறது அவற்றை நீக்க வேண்டும்” என்று, கூறியிருக்கிறார்.

அத்துடன், “இந்த சிறுமியின் தோஷத்தை போக்க வேண்டும் என்றால், உன் மகளை என் வீட்டிற்கு அழைத்து வா” என்று, அவரது தாயாரிடம் அந்த சாமியார் கூறியிருக்கிறார்.

அதன்படியே, அந்த தாயாரும் அந்த சாமியாரின் வீட்டிற்கு தனது 14 வயது மகளை அழைத்துச் சென்றிருக்கிறார். 

அப்போது, அந்த சிறுமியின் தாயாரிடம் பேசிய அந்த சாமியார், “உங்களின் எல்லா தேவைகளையும் இனி நான் நிறைவேற்றி வைக்கிறேன்” என்று சொல்லி இருக்கிறார் அந்த சாமியார்.

சாமியாரின் இந்த பேச்சின் உள் அர்த்தத்தை புரிந்துகொண்ட அந்த தாய், தனது மகளை சாமியாருடன் அங்குள்ள ஒரு அறைக்குள் தனியாக அனுப்பி வைத்துவிட்டு, இந்த பெண் வெளியே நின்றிருக்கிறார். 

ஆனால், அந்த 14 வயது சிறுமி, அந்த அறைக்குள் சென்றதும், அந்த சிறுமியை அந்த சாமியார் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் என்றும், கூறப்படுகிறது.

பின்னர், அந்த சிறுமியை அந்த சாமியார் விடுவித்த நிலையில், வெளியே அழுதுக்கொண்டே அந்த சிறுமி வந்திருக்கிறார். உள்ளே நடந்ததை தனது தாயாரிடம் அந்த சிறுமி கூறிய நிலையில், அதனை அந்த தாயார் கண்டுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, தாயாருடன் வீடு திரும்பிய அந்த சிறுமி, சாமியாரின் பாலியல் பலாத்காரம் குறித்து, தனது தந்தையிடம் அழுதுகொண்டே கூறியிருக்கிறார் அந்த சிறுமி. 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் தந்தை, இது குறித்து உடனடியாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கோவாவில் திவிம் என்னும் பகுதியில் உள்ள கான்சா கிராமத்தில் பதுங்கி இருந்த அந்த போலி சாமியாரை போலீசார் அதிரடியாக கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 

அத்துடன், அந்த போலி சாமியாருக்கு உடந்தையாக இருந்த அந்த 14 வயது சிறுமியின் தாயாரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இதனையடுத்து, அவர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டம் உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, ஜோசியம் பார்க்கப்போன சிறுமியை, போலி சாமியார் ஒருவர் தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில், சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்து, அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.