மலையாள சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் கடைசியாக இந்த ஆண்டில் (2022) வெளிவந்த ப்ரோ டாடி மற்றும் ஜனகணமன ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற சூப்பர் ஹிட்டானது.தொடர்ந்து வரிசையாக திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

முன்னதாக இயக்குனர் ஷாஜி காளிதாஸ் இயக்கத்தில் பிரித்விராஜ் நடித்திருக்கும் கடுவா திரைப்படம் வருகிற ஜூன் 30-ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் கோல்ட் திரைப்படம் அடுத்து ரிலீஸாக தயாராகி வருகிறது.

இந்த வரிசையில் அடுத்ததாக அட்வெஞ்சர் திரைப்படமாக பிரித்விராஜ் நடிப்பில் தயாராகி வருகிறது ஆடுஜீவிதம். இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் உருவாகும் ஆடுஜீவிதம் படத்தில் பிரித்விராஜ் உடன் இணைந்து அமலாபால் கதாநாயகியாக நடிக்க ரிக் அபி மற்றும் தாலிப் முஹம்மத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

விஷுவல் ரொமான்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ஆடுஜீவிதம் படத்துக்கு K.U.மோகனன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். இசைப்புயல் A,R,ரஹ்மான் ஆடுஜீவிதம் படத்திற்கு இசையமைக்கிறார். ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ஜோர்டான் பகுதியிலுள்ள வடி ரம் பாலைவனத்தில் தற்போது ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு இசைப்புயல் A.R.ரஹ்மான் வருகை புரிந்து படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். நடிகர் பிரித்விராஜ்-A.R.ரஹ்மானுடன் இணைந்திருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…