“நாம்ம சந்தோஷமா வாழ வேண்டும் என்றால், என் புருஷனை கொன்றுவிடலாம்” என்று கூறி, ஒரு கொடூர மனைவி ஒருவர், கள்ளக் காதலனுக்கு ஸ்கெச் போட்டு கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் மொராதாபாத்தில் இருக்கும் போஜ்பூர் பிஜினா கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான ரமேஷ், தனது மனைவி சீமா உடன் வசித்து வந்தார்.

ரமேஷின் மனைவி சீமா, அந்த பகுதியைச் சேர்ந்த சுசிகி என்ற பிந்து உடன் அறிமுகம் ஏற்பட்டு, அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக கள்ளக் காதலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

அதுவும், கணவன் ரமேஷ் வீட்டில் இல்லாத நிலையில், அவர்கள் இருவரும் அடிக்கடி உல்லாச இன்பத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.

இந்த கள்ளக் காதல் விசயம், ஒரு கட்டத்தில் ரமேஷிற்கு தெரிய வந்துள்ளது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த கணவன், தனது மனைவி சீமாவை அடித்து உதைத்திருக்கிறார். 

இதனால், கடும் கோபம் அடைந்த மனைவி சீமா, “நாம்ம சந்தோஷமா வாழ வேண்டும் என்றால், என் புருஷனை கொன்றுவிடலாம்” என்று, தனது கள்ளக் காதலன் பிந்துவிடம் கூறி இருக்கிறார். அதன்படியே, அவர்கள் இருவரும் சேர்ந்து திட்டம் போட்ட நிலையில், “தனது கணவனை எப்படி கொலை செய்ய வேண்டும்? என்ப பற்றியும், தனது கள்ளக் காதலனுக்கு ஸ்கெச் போட்டு கொடுத்திருக்கிறார் அந்த கொடூர மனைவி.

இப்படியாக, கணவனை கொன்ற பிறகு, கள்ளக் காதலர்கள் இருவரும், மெஹ்ராதாபாத்தில் ஒன்றாக வாழ திட்டமிட்டிருக்கிறார்கள்.

அதன்படி, கள்ளக் காதலன் சுசிகி என்கிற பிந்து, தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து ரமேஷை கொள்ள திட்டம்போட்டிருக்கிறார்.

அதன்படி, ரமேஷ்க்கு போன் செய்த பிந்து, அவரை சக்பேகம்பூர் என்னும் பகுதிக்கு வரவழைத்திருக்கிறார்.

அங்கு அந்த கள்ளக் காதலன் பிந்து, அவனது கூட்டாளியான மனோஜு உள்ளிட்ட இன்னும் 2 கூட்டாளிகளை வரவழைத்து உள்ளான்.

அதன்படியே, அங்கு ரமேஷ் வந்ததும், அவர்கள் 4 பேருமாக சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது, ரமேஷிற்கு நல்ல ஊத்தி கொடுத்த நிலையில், அவருக்கு போதை தலைக்கு ஏறிய நிலையில், அப்போது பிந்து உள்ளிட்ட அவனது கூட்டாளிகள் 3 பேரும் சேர்ந்து, ரமேஷின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொன்று உள்ளனர். 

இதனையடுத்து, அவரது சடலத்தை அங்குள்ள ஓம் பிரகாஷின் வாயிலில் அவர்கள் வீசி உள்ளனர். 

இந்த நிலையில் தான், அவரது உடலை கைப் பற்றி வழக்குப் பதிவு செய்த தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், சொந்த மனைவியின் தூண்டுதலின் பெயரிலேயே கள்ளக் காதலன் தனது கூட்டாளியுடன் சேர்ந்து ரமேஷை மது குடிக்க வைத்து, அவரது கழுத்தை நெரித்து கொன்றது தெரிய வந்தது.

இதனையடுத்து, போலீசார் ரமேஷின் மனைவி சீமா மற்றும் அவரது கள்ளக் காதலன் உட்பட மொத்தம் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவர்களை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பீதியும் ஏற்படுத்தி உள்ளது.