இந்திய திரை உலகின் மிக முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் வரிசையாக அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் போலா ஷங்கர் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

மேலும் தமிழில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஃபகத் பாசில், வைகைப்புயல் வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து மாமன்னன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இதனிடையே கீர்த்தி சுரேஷ் மற்றும் டொவினோ தாமஸ் இணைந்து நடித்திருக்கும் வாஷி திரைப்படம் வருகிற ஜூன் 17ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

முன்னதாக இந்த ஆண்டில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த சாணிக் காயிதம் மற்றும் சர்க்காரு வாரி பாட்டா ஆகிய 2 திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளன. இந்நிலையில் அடுத்தடுத்து இந்த 2 படங்களின் வெற்றி குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “ஸ்கிரீன் சீன் தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் , உடன் நடித்த இயக்குனர் செல்வராகவன் மற்றும்  சாணக் காயிதம் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ் அதேபோல் சர்க்காரு வாரி பாட்டா படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் மகேஷ் பாபு உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

மேலும் எல்லாவற்றிற்கும் மேலாக, “தனது ரசிகர்கள் தனக்கு பக்கபலமாக இருப்பதாகவும் அவர்களின் அளவற்ற அன்பும் ஆதாரவும் தான் தன்னை வழி நடத்துவதாகவும் இதற்காக ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவிப்பதாகவும் ன"கூறியுள்ளார். கீர்த்தி சுரேஷின் அந்த அறிக்கை இதோ…