“அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்” என குறிப்பிட்டு இருந்ததை, எடப்பாடி பழனிசாமி நீக்கி விட்டு, தனக்குத் தானே புதிய பொறுப்புகளை போட்டுக்கொண்டது, அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்து கிளம்பி இருக்கும் நிலையில், தமிழ்நாட்டு அரசியலில் தற்போது அடுத்தடுத்து அரசியில் புயல் காற்று அனல் காற்றாக வீசத் தொடங்கி இருக்கிறது.

இதன் காரணமாக, அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் என்று, 2 பிரிவுகளாக பிரிந்து, இரு தரப்பினரும் எதிரிகளைப் போல் பாவனை செய்து வரும் சம்பவங்கள் தற்போது ஒவ்வொன்றாக அரங்கேறத் தொடங்கி இருக்கின்றன.

இந்த விவகாரம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், எம்.ஜி.ஆரால் எழுதப்பட்ட அவரது உயிலில் “அதிமுக ஒற்றை தலைமை” குறித்து சொல்லப்பட்ட ரகசியமும், வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அதன் தொட்ச்சியாக, “ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளரே கிடையாது” என்று, இபிஎஸ் நேற்றைய தினம் வெளிப்படையாக கடிதம் எழுதி இருந்தது, அதிமுகவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

“தலைமைக்‌ கழக நிர்வாகிகள்‌ ஆலோசனைக்‌ கூட்டத்திற்கு புறக்கணித்த நிலையில்‌, தற்போதைய தங்களின்‌ இந்தக்‌ கடிதம்‌ ஏற்படையதாக இல்லை என்றும், கட்சியை செயல்படாத நிலைக்குக்‌ கொண்டு செல்வதற்கான அனைத்துப்‌ பணிகளையும்‌ செய்தீர்கள்” என்று, ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் கடிதம் எழுதி, எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து ஓ.பன்னீர்செல்லத்திற்கு எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த 23.6.2022 அன்று நடைபெற்ற அதிமுக‌ பொதுக் குழுவில்‌, 1.12.2021 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவால்‌ கொண்டுவரப்பட்ட கழக சட்ட திட்ட திருத்தங்கள்‌ அங்கீகரிக்கப்படவில்லை என்றும், இதனால்  அந்த சட்ட திட்ட திருத்தங்கள்‌ காலாவதி ஆகிவிட்டது என்றும, எனவே அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ என்ற உணர்வில்‌ தாங்கள்‌ எழுதியுள்ள கடிதம்‌ செல்லத்தக்கதல்ல” என்றும், எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் பகிரங்கமாகவே அறிவித்தார்.

இந்த கடிதம் காரணமாக, அதிமுகவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்பட்ட நிலையில், தற்போது அடுத்த பிரச்சனையும், அதிமுகவில் தற்போது வெடித்து கிளம்பி உள்ளது.

அதாவது, தற்போது புதிய பிரச்சனை என்னவென்றால், எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் அதிமுக பொறுப்பை மாற்றிக்கொண்டு உள்ளார். 

அதன்படி, “அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என்பதை நீக்கி விட்டு, அதிமுக தலைமை நிலைய செயலாளர்” என்று, தனக்குத் தானெ  மாற்றிக்கொண்டு இருக்கிறார்.

இந்த விவகாரம் தான், அதிமுகவில் தற்போது பூதாகரமாக வெடித்து கிளம்பி உள்ளது. இதனால், அதிமுகவில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக, அக்கட்சியினரே வெளிப்படையாக புலம்பி வருகின்றனர்.

அதே போல், பினாமி பெயரில் சசிகலா வாங்கிய 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியதாக தகவல்கள் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.