தமிழ் திரையுலகின் நகைச்சுவை நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சந்தானம்  முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படங்கள் அடுத்தடுத்து வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன.முன்னதாக இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காக நகைச்சுவை ஸ்பை த்ரில்லர் படமாக தயாராகி இருக்கும் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  இதனைத் தொடர்ந்து இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் நகைச்சுவை திரைப்படமாக சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குலுகுலு.

குலுகுலு திரைப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்தத நிலையில் தற்போதுது இறுதிகட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில் பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் 15வது திரைப்படமாக தயாராகி வருகிறது SANTA15.  

 #SANTA15 திரைப்படத்தில் சந்தானம் உடன் இணைந்து தன்யா போப் கதாநாயகியாக நடிக்க, ராகினி திரிவேதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஃபார்ச்சூன் பிலிம்ஸ் தயாரிக்கும் SANTA15 படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். இந்நிலையில் #SANTA15 படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

My next #SANTA15 shooting wrapped up. It was a super fun journey with director @iamprashantraj 👍 Get ready to witness one awesome fun entertainer. More updates coming soon.@TanyaHope_offl @raginidwivedi24 @ArjunJanyaMusic @Fortune_films #ProductionNo10 @johnsoncinepro pic.twitter.com/Fn6XxokfL9

— Santhanam (@iamsanthanam) June 30, 2022