தற்போதைய தமிழ் சினிமா ரசிகர்களிடையே ட்ரெண்டிங் நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு, தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி விடும் வாரிசு திரைப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் இன்று(ஜூலை-1) உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ள யானை படத்தில் காமெடியனாக கலக்கியிருக்கும் யோகிபாபு அடுத்தடுத்து சிவகார்த்திகேயனின் அயலான் இயக்குனர் செல்வராகவன்- தனுஷ் கூட்டணியின் நானே வருவேன், இயக்குனர் சுந்தர்.Cயில் காஃபி வித் காதல் மற்றும் லெஜண்ட் சரவணனின் தி லெஜண்ட் உள்ளிட்ட திரைப்படங்களிலும் காமெடியனாக கலக்கியுள்ளார்

மேலும் முன்னணி கதாபாத்திரங்களில் யோகிபாபு நடித்துள்ள காசேதான் கடவுளடா, சலூன் ஆகிய திரைப்படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ளன. மேலும் A1 & பாரிஸ் ஜெயராஜ் படங்களின் இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் மெடிக்கல் மிராக்கல் படத்திலும் யோகிபாபு நடித்துள்ளார். இந்த வரிசையில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள பன்னிகுட்டி திரைப்படம் வருகிற ஜூலை 8ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

இயக்குனர் அனுச்சரண் இயக்கத்தில் யோகி பாபு மற்றும் கருணாகரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பன்னிக்குட்டி படத்தில்  திண்டுக்கல் ஐ லியோனி, விஜய் டிவி ராமர், விஜய் டிவி தங்கதுரை, சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ள பன்னிகுட்டி படத்திற்கு K இசையமைத்துள்ளார். இந்நிலையில் பன்னிகுட்டி திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. கலக்கலான அந்த ட்ரைலர் இதோ…