தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா மூவரும் இணைந்து நடித்து வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அடுத்ததாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் அஜித் குமாரை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித்குமார் நடிக்கும் #AK62 திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் கடந்த ஜூன் 9-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. முன்னணி பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட இவர்களது திருமண நிகழ்வை இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் படமாக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகுப்பு விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.
 
இந்நிலையில் அஜித்குமாரின் #AK62 திரைப்படத்திற்கு முன்பாக இயக்குனர் விக்னேஷ் சிவன், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சியை இயக்க உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் வருகிற ஜூலை 28-ம் தேதி தொடங்கப்பட்டு, ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
 

Vignesh Shivan to direct the opening ceremony Of 44th Chess Olympiad event which is to take place from July 28 !♟️@VigneshShivN #VigneshShivan #ChessOlympiad pic.twitter.com/FKdzks4N4X

— Galatta Media (@galattadotcom) June 30, 2022