தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவராக ஜொலிக்கும் சிலம்பரசன்TR நடிப்பில் கடந்த ஆண்டு(2021) இறுதியில் வெளிவந்த மாநாடு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து சிலம்பரசன்TR நடிப்பில் அடுத்தடுத்து வெளிவரும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் 3-வது முறையாக இணைந்துள்ள இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்-இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்-சிலம்பரசன்TR கூட்டணியில் உருவாகியிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக கொரோனா குமார் திரைப்படத்தில் சிலம்பரசன்TR நடிக்கவுள்ளார். இதனிடையே இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பத்து தல. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக பத்து தல திரைப்படம் தயாராகி வருகிறது.

 ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகும் பத்து தல திரைப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், கலையரசன் மற்றும் டீஜே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஃபரூக் J பாஷா ஒளிப்பதிவில் பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் பத்து தல படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

பத்து தல திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு எஞ்சியுள்ள நிலையில், தற்போது பத்து தல திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் 14-ம் தேதி பத்து தல திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

The power-packed #SilambarasanTR & #GauthamKarthik Starrer #PathuThala Releasing worldwide In Theatres on December 14th, 2022. #Atman #PathuThalaFromDec14@StudioGreen2 @Kegvraja @PenMovies @jayantilalgada @SilambarasanTR_ @Gautham_Karthik @arrahman @nameis_krishna pic.twitter.com/lHNZE3pRHp

— Studio Green (@StudioGreen2) June 30, 2022