தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு (2021) உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசான புஷ்பா The-Rise Part-1 திரைப்படம் பலகோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மெகாஹிட் பிளாக்பஸ்டர் ஆனது.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, நடிகர் ஃபகத் பாசில் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார். தெலுங்கு,தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள புஷ்பா திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்துள்ளது. 

மிர்ரோஸ்லா குபா ப்ரோஸ்கி ஒளிப்பதிவில், கார்த்திகா ஸ்ரீநிவாஸ் படத்தொகுப்பு செய்ய, புஷ்பா திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். புஷ்பா திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் தனது தாடியை தடவவும் ஸ்டைல் உலகளவில் மிகவும் ட்ரெண்ட் ஆனது. 

குறிப்பாக ரவீந்திர ஜடேஜா, டேவிட் வார்னர் போன்ற கிரிக்கெட் பிரபலங்கள் உட்பட பலரும் இந்த ஸ்டைலை ட்ரெண்டாக்கினர். அந்தவகையில் தற்போது உலகளவில் பிரபலமான குத்துச்சண்டை போட்டிகளில் ஒன்றான WWEல் இந்தியாவை சார்ந்த குத்துச்சண்டை வீரரான சங்கா எனும் சௌரவ் கர்ஜர் புஷ்பா ஸ்டைலை செய்யும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த வீடியோ இதோ…
 

मैं झुकेगा नहीं 😡

जय हिंद 🙏🇮🇳 @alluarjun #AlluArjun #WWE #wweindia #NXT pic.twitter.com/jJSKkZWYqA

— Saurav Gurjar (@Sanga_WWE) June 30, 2022