வெற்றிநடை போடும் தமிழகம் பிரசாரத்தின் வெற்றிக்குப் பிறகு, #திமுகவிற்கு முற்றுப்புள்ளிவைப்போம்  என்கிற பிரச்சாரத்தை துவங்கியுள்ளது அதிமுக.


#திமுகவிற்குமுற்றுப்புள்ளிவைப்போம் என்கிற  பிரச்சாரத்தை இன்று முதல் துவங்கியுள்ளது  அதிமுக. இந்த முற்றுப்புள்ளி வைப்போம் பிரச்சாரம் முதலில் ட்விட்டர்  தளத்தில் துவங்கப்பட்டது. இதன்மூலம் சமூக ஊடகங்களிலும், தேர்தல் களத்திலும் திமுக காலத்தில் இருந்தப் பிரச்சனைகள் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்யும்  முயற்சியில் அதிமுக இதனை துவக்கியுள்ளது.

திமுக ஆட்சியில் நடந்த  சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ,மின் வெட்டால்  மக்கள் பட்ட துன்பங்கள், நில அபகரிப்பு மற்றும் ரௌடிகளால் பொதுமக்கள்  பட்ட கஷ்டங்கள்  அதிகார துஷ்பிரயோகங்கள், அத்துமீறல்கள, ஊழல்கள் போன்றவற்றை புள்ளி விவரத்தோடு பிரசாரத்தில்  பேசிவருகிறார்கள்.


மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி செய்த நலத்திட்டங்கள், செயல்பாடுகள் , 
 சாதனைகளை குறித்த விபரங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்