தமிழகத்தின் மாபெரும் அரசியல் இயக்கமாக விளங்கியது  திராவிட முன்னேற்ற கழகம்.  கருணாநிதி காலம் சென்ற பிறகு திமுகவின்  மதிப்பும், முன்னேற்றமும் அஸ்தமிக்கும் சூரியனை போல மங்கி கொண்டிருக்கிறது என அதிமுக வட்டாரம் தெரிவிக்கிறது.


துறைமுகம் பகுதியில் கடந்த வாரம் நடந்த கட்சி நிகழ்ச்சியில் மின்விளக்கு அலங்காரத்தில் ஸ்டாலின்,கலைஞர், அண்ணா ஆகியோர் முகங்கள் பொறிக்கப்பட்டிருந்தது. திமுக உருவாக காரணமாக இருந்த திராவிடர் கழகத்தை  உருவாக்கிய பெரியாரை முகம் இல்லை. ஸ்டாலின் தன்னை மட்டும் முன்னிறுத்தி மற்ற தலைவர்களை பின் வரிசையில் இருக்கும்படி செய்கிறார் என குற்றச்சாட்டு கட்சியின் உள்ளேயே எழும்ப தொடங்கியுள்ளது. 


திமுகவில் கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க செயற்குழு கூடியபோது “ கலைஞர், ஸ்டாலின் எனும் ஆலவிழுதை விட்டு சென்றுள்ளார்” என துரைமுருகன் பேசினார். ஆனால், ஸ்டாலின் தானே அந்த ஆலமரமாக மாறி அதன் கீழுள்ள விழுதுகளை நசுக்க ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள். 


ஸ்டாலினை தலைமையில் அமரவைத்து அழகு பார்த்த திமுகவின் மூத்த தலைவர்கள், தற்போது நாங்களும் திமுக தலைவர்கள் தான் என்று கூறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் ஸ்டாலினை மட்டும் முன்னிறுத்தி மற்ற தலைவர்களை பின் வரிசையில் இருக்கும்படி செய்வதும் ஐபெக் நிறுவனம் திட்டமா என்கிற கேள்வி எழும்பி உள்ளது. 


 தமிழை உயர்த்தி தமிழ்நாட்டிற்கென வாழ்ந்த தலைவர்களின் இயக்கத்தின் தற்போதைய தலைவராக இருக்கும் ஸ்டாலின், வடநாட்டு நிறுவனமான ஐபெக்கின் ஆசை வார்த்தைகளுக்கு அடிபணிந்து வேலேந்தி நின்ற காட்சி கட்சியின் கடைசி தொண்டர்கள் வரை திணறடிக்க வைத்துள்ளது என்கிறார்கள் அதிமுக’வினர்.