இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் என்ற அறிமுக இயக்குனர் இயக்கிய படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார் .மேலும் இந்த படத்தில் இயக்குனர் மகிழ் திருமேனி, விவேக், இயக்குநர் மோகன்ராஜா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

சந்திரா ஆர்ட்ஸ் இசக்கி துரை இந்த படத்தை தயாரித்துள்ளார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்கிறார். பழனி மற்றும் ஊட்டி போன்ற சில பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. 

ஏற்கனவே படப்பிடிப்பை முடித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனம் கைப்பற்றி உள்ளது. நேற்று இந்த படத்தின் டீஸர் வெளியானது. இலங்கை தமிழராக நடித்திருந்தார் சேது. சமூக வளைத்தளங்களிலும் இந்த டீஸருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. 

இந்நிலையில் படத்தின் இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது : அன்பார்ந்த face book நண்பர்களுக்கு...
மன்னிக்கவும்... இது வரை நான் இயக்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் படம் பற்றிய அத்தனை அப்டேட்சையும் நான் தவறாமல் பதிவிட்டிருக்கிறேன். இந்த முறை டீசர் வெளிவருவது சம்மந்தமான போஸ்டரையோ வெளிவந்த டீசரையோ நான் எனது முக நூல் பக்கத்தில் வெளியிடவில்லை.

அதற்கு மிக முக்கியமான காரணம்  நான் இயக்கிய படமான யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்துக்கான டீசர் வெளி வருகிறது என்று எனக்கு தெரியாது. கூடவே மிக முக்கியாமான தகவல் அந்த டீசருக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. நான் அந்த டீசர் ரிலீஸ் ஆகி 45 நிமிடங்கள் கழித்தே பார்த்தேன். திரும்பவும் மன்னிக்கவும். நான் வேறு வழியில்லாமல் அந்த டீசரை பற்றி பேசாமல் மௌனமாக கடந்து போகிறேன்.

உண்மையில் இந்த படத்தின் ஆன்மாவை உள்ளங்கையில் காட்ட கூடிய நான் கட் பண்ணிய டீசர் என்னிடம் இருக்கிறது. டப்பிங் செய்யப்படாமல் RR செய்யப்படாமல் di செய்யப்படாமல் அப்படியே ராவாக இருக்கிறது. தயாரிப்பு தரப்போடு இந்த குளருபடிக்கு அடிப்படை காரணம் பற்றி கேட்டிருக்கிறேன். தக்க பதில் வந்தால் என் முக நூல் நண்பர்களுக்கு அறிவிக்கிறேன்.

இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதலாக பதிவு செய்து வருகின்றனர். இதற்கு சரியான தீர்வு கிடைக்குமா ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அன்பார்ந்த face book நண்பர்களுக்கு... மன்னிக்கவும்... இது வரை நான் இயக்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த...

Posted by Venkata Krishna Roghanth on Thursday, March 4, 2021