ஆரம்பத்தில் உப்பு சப்பு இல்லாமல் ஊர்ந்த பிக்பாஸ் தற்போது காரசாரமாக ஓடுகிறது. இந்த வாரத்தின் முதல் நாளில் தனது நாணயத்தின் சக்தியால் கேப்டன்சியை பறித்த இசைவாணி நாமினேஷனில் இருந்து தப்பித்துக் கொண்டார். ஆகாயம் நாணயத்தின் வாரம் என்பதால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் பாவனிக்கு பல அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

மேலும் லிவ்விங் ஏரியா பாவனியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. லிவிங் ஏரியாவில் நுழையும் அனைவரும் பாவனி கொடுக்கும் டாஸ்க்கை செய்த பின்னர் நுழைய வேண்டும். இல்லையேல் தண்டனை வழங்கப்படும். நேற்று நிரூப் மற்றும் அக்ஷரா விதிகளை மீறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் தண்டனையும் அனுபவித்தனர்.

தொடர்ந்து பிக்பாஸ் விருதுகள் வழங்கும் விழா நேற்று தொடங்கியது. சிறந்த போட்டியாளர் விருதை நிரூப் வெல்ல, சிறந்த எண்டர்டெயினர் விருதை ராஜு வென்றார். நேற்றைய விருது விழா நிகழ்ச்சியின் தொடர்ச்சி இன்று தொடர்கிறது. இதில் விஷ பாட்டில், சிம்பிளி வேஸ்ட், தொட்டாச்சிணுங்கி என பெயர்கள் பொருத்திய கிரீடங்கள் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் அக்ஷராவுக்கு விஷ பாட்டில், இசைவாணிக்கு தொட்டாசினிங்கி, நிரூப்பிற்கு சிம்பிளி வேஸ்ட் என இருக்கும் கிரீடங்கள் வழங்கப்படுகிறது. இதற்கு அவர்கள் எதிர்த்து பேசும் வாதங்கள் என அனல் பறக்கும் புதிய ப்ரோமோ வீடியோ சற்று முன்பு வெளியானது அந்த ப்ரோமோ வீடியோ இதோ…