“பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக” மாணவியின் பெற்றோர் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கோவை கோட்டைமேடு பகுதியில் வசித்து வரும் மகுடேஷ்வரன் - நிறைமதி தம்பதியினரின் 17 வயது மகள், கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். 

இப்படியான சூழலில் தான், கடந்த 6 மாதத்திற்கு முன்பாக, “பள்ளிகூடம் செல்ல விரும்பவில்லை” என்று கூறி அந்த மாணவி மாற்றுச் சான்றிதழ் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து, தற்போது வேறு பள்ளியில் சேர்க்க பெற்றோர் முயன்று வந்த நிலையில், அந்த மாணவி தனது வீட்டிலேயே இருந்து வந்தார்.

இந்நிலையில் தான், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாமல் தனியாக இருந்த அந்த மாணவி, வீட்டின் கதவை உள் பக்கமாகதாழ்ப்பாள் போட்டு விட்டு, அந்த மாணவி ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து, அடுத்த சில நிமிடங்களில் வீடு திரும்பிய அந்த மாணவியின் பெற்றோர், தங்களது மகள் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்தது கதறி துடித்து உள்ளனர்.

அத்துடன், இது குறித்து அங்குள்ள உக்கடம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கா அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். 

போலீசாரின் இந்த விசாரணையின் போது, தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கு அவரது பள்ளியின் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. 

அதாவது, அந்த மாணவி ஏற்கனவே படித்த பள்ளியின் ஆசிரியர், குறிப்பட்ட அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. 

இது தொடர்பாக, அந்த மாணவி, தனது பெற்றோரிடமும் கூறி கதறி அழுதியிருக்கிறார். ஆனால், பெண் பிள்ளையின் மானம் மற்றும் குடும்ப கவுரவத்தைப் பார்த்துவிட்டு, மாணவியின் பெற்றோர் இதனை புகார் தராமல் அப்படியே இருந்து உள்ளனர்.

ஆனால், “தங்கள் மகளின் மனதில் அந்த பாலியல் தொல்லை குறித்த அழுத்தம் மனதிலேயே இருந்ததால், தங்கள் மகள் தற்கொலை செய்துகொண்டதாக” மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட ஆசிரியரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

இந்த நிலையில், மாணவி எழுதி வைத்திருந்ததாக கூறப்படும் கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ள போலீசார், அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.