தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் நாரப்பா. தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்து மெகா ஹிட்டான அசுரன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பா நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் இந்த ஆண்டு(2021) வெளியானது.

இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம் 2 திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நடித்துள்ளார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த த்ரிஷ்யம் திரைப்படம் இந்திய அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்து பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 

அந்தவகையில் த்ரிஷ்யம் 2 திரைப்படமும் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தெலுங்கிலும் த்ரிஷ்யம் 2 படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆசிர்வாத் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ள த்ரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக் படமும் அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வருகிற நவம்பர் 25-ஆம் தேதி ரிலீசாகிறது.

வெங்கடேஷ்,மீனா,நதியா,கீர்த்திகா,எஸ்தர் அனில்,சம்பத்ராஜ், நரேஷ், தனிக்கெல்லா பரணி ஆகியோர் இணைந்து நடித்துள்ள த்ரிஷ்யம் 2 படத்திற்கு சதிஷ் குருப் ஒளிப்பதிவு செய்ய, அனுப் ருபன்ஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் திரிஷ்யம் 2 திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது. பரபரப்பான அந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.