விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஆகாயத்தின் வாரம் என்பதால் ஆகாய நாணயத்தை வைத்திருக்கும் பாவனிக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. லிவ்விங் ஏரியா முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாவனிடம் அனுமதி பெற்று லிவ்விங் ஏரியாவிற்குள் நுழைய வேண்டும் என்பது விதிமுறை, விதியை மீறினால் தண்டனை.

தொடர்ந்து நீயும் பொம்மை நானும் பொம்மை லக்ஜரி பட்ஜெட் டாஸ்க் அனல் பறக்க நடைப்பெற்று முடிந்தது. இதில் நிரூப் வெற்றி பெற்றார். இதனை அடுத்து பிக்பாஸ் விருதுகள் வழங்கும் விழா நேற்று (நவம்பர் 11) நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்றும் பிக்பாஸ் விருது வழங்கும் விழா தொடர்கிறது.

இந்த விழாவில் விஷ பாட்டில், தொட்டாசினுங்கி, சிம்பிளி வேஸ்ட் என பெயர்கள் பொருத்திய கிரீடங்கள் வழங்கப்படுகிறது.அக்ஷராவுக்கு விஷ பாட்டில், இசைவாணிக்கு தொட்டாசினிங்கி, நிரூப்பிற்கு சிம்பிளி வேஸ்ட் என இருக்கும் கிரீடங்கள் வழங்கப்பட, கிரீடத்தை பெற்றவர்கள் வழங்கியவர்களிடம் வாதிடும் ப்ரோமோ வீடியோ இன்று முன்னதாக வெளியானது. 

இந்நிலையில், இன்றைய (நவம்பர் 12) நிகழ்ச்சியில் “முகத்திற்கு நேராக கருத்துக்களை சொல்ல தைரியம் இல்லாமல் தனித்துவத்தை இழந்து நிற்கும்” 2 நபர்களின் பெயரை அறிவிக்கும்படி பிக்பாஸ் கூற அனேக போட்டியாளர்கள் ராஜுவையும் இமான் அண்ணாச்சியையும் தேர்வு செய்கிறார்கள். 

பின்னர் ராஜு - இமான் அண்ணாச்சி இருவருக்கும் தண்டனை வழங்கப்படுகிறது. அப்போது ராஜு “செருப்ப கழட்டி ஒரு அடி அடிச்சுட்டு சொல்லு” என பேசும் காரசாரமான ப்ரோமோ வீடியோ சற்று முன் வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ…