“டிஜிட்டல் முறையிலான கற்பித்தல் ஊக்குவிக்கப்படும் என்றும், 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்” என்றும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் கல்விதுறைக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

அதன் படி,

- 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அதாவது, 1-12 ஆம் வகுப்பு வரை மாநில மொழி கல்வி ஊக்குவிக்கப்படும் என உறுதி.

- 2025 ஆம் ஆண்டுக்குள் 100 சதவீதம் ஆப்டிக்கல் பைபர் நெட் வசதி உருவாக்கப்படும்.

- கல்வி நிறுவனங்களில் டிஜிட்டல் முறையிலான கற்பித்தல் ஊக்குவிக்கப்படும் என்றும், அறிவிக்கப்பட்டு உள்ளது.

- அதாவது, ஊரக மாணவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட  மாணவர்கள் கல்வி கோவிட் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளதால், புதிய கல்வி தொலைக்காட்சி சேனல்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.

- கிராமப்புற மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக கூடுதல் கல்வி தொலைக்காட்சிகள் தொடங்கப்படும்.

- தொலைக்காட்சிகள் மூலமாக கல்வி முறையை செயல்படுத்தும் திட்டத்தின்கீழ் புதிதாக 200 சேனல்கள் உருவாக்கப்படும்.

- ஆன்லைன் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

- டிஜிட்டல் முறையிலான கற்பித்தல் ஊக்குவிக்கப்படும்.

- நாடு முழுவதும் டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்.

- இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் ஒலி, ஒளி, வரைகலை சார்ந்த பணிகள் ஊக்குவிக்கப்படும்.

- பிரதமரின் இ வித்யா திட்டத்தின் மூலம், அதிக மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும்.
 
- டிஜிட்டல் சிப் கொண்ட இ-பாஸ்போர்ட் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும்.

- பாரத் நெட் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் இணைய வழி சேவை தொடங்கப்படும்.

- 2025 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கு இணைய வசதி வழங்கப்படும்.

- நவீன தொழில்நுட்பத்துடன் சிப் வழங்கப்படும் என்றும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.

- குறிப்பாக, உலகிலேயே மிகவும் வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிகைத் தெரிவித்து உள்ளார்.