இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகைகளில் ஒருவராக விளங்கும் நடிகை ப்ரியாமணி இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களால் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது மொழிகளை கடந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் பலவிதமான கதாபாத்திரங்களிலும் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.

முன்னதாக கன்னடத்தில் த்ரில்லர் திரைப்படமாக விரைவில் வெளிவர இருக்கும் Dr56 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ப்ரியாமணி தெலுங்கில் ராணா டகுபதி கதாநாயகனாக நடிக்கும் விரட்ட பர்வம் படத்திலும் , கன்னடம் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் சைனைட் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடிப்பதோடு  இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் பாலிவுட் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் வருகிற  பிப்ரவரி 11ஆம் தேதி நேரடியாக aha ORIGINALS  தளத்தில் ரிலீசாகிறது ப்ரியாமணி நடித்துள்ள பாமா கலபம் திரைப்படம். இயக்குனர் அபிமன்யு எழுதி இயக்கியுள்ள நகைச்சுவை த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் பாமா கலபம் திரைப்படத்தில் பிரபல  தமிழ் நடிகர் ஜான் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

SVCC DIGITAL சார்பில், போகவள்ளி பப்பிநீடு & சுதீர் எடரா இணைந்து தயாரித்துள்ள பாமா கலபம் திரைப்படத்திற்கு தீபக்குமார் ஒளிப்பதிவு செய்ய பிரபல இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார்.  இந்நிலையில் பாமா கலபம் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது ப்ரியாமணியின் வித்தியாசமான நடிப்பில் வெளிவர இருக்கும் பாமா கலபம் படத்தின் கலக்கலான ட்ரைலர் இதோ…