2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய நிதிலை அறிக்கையை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 4 வது முறையாக இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்தியாவில் கடந்த காலங்களில் பிப்ரவரி இறுதியில் தாக்கல் செய்யப்பட்டு வந்த மத்திய நிதிநிலை அறிக்கையானது, பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், அது பிப்ரவரி ஒன்றாம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டது. 

அந்த வகையில், தற்போது 2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று காலை மிகச் சரியாக 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார். 

இதன் மூலமாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 4 வது முறையாக இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்.

அத்துடன், தற்போது கொரோனா பெருந் தொற்று காரணமாக, 2 வது முறையாக காதிதம் இல்லாத மின்னணு முறையிலேயே, இந்த மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தாக்கல் செய்திருக்கிறார்.

முக்கியமாக, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் விரைவில் நடக்க இருக்கும் நிலையில் மத்திய நிதிநிலை அறிக்கை குறிப்பிட்ட அந்த 5 மாநிலங்களை டார்க்கெட் செய்து பல்வேறு சலுகைகள் அறிவிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் எதிர்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி, இந்த முறை “தனி நபர் வருமான வரி தொடர்பாக அறிவிப்பு இருக்கும்” என்றும் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் தான், இன்று காலை குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.

அதன் தொடர்ச்சியாக காலை 11 முன்னதாக மக்களவைக்கு வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காலை 11 மணிக்கு,  2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். 

அதன்படி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்து, அது குறித்து பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.

அதன்படி பேசத் தொடங்கிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ இந்தியாவில், தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் கொரோனா பரவல் குறைந்து உள்ளதாக” பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஏழைகள், நடுத்தர மக்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு செயலாற்றி வருகிறது” என்றும், கூறினார். 

அத்துடன், “25 ஆண்டுகளை இலக்காகக்கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும்” மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பேசி வருகிறார். இது தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை அவர் ஒன்றன் பின் ஒன்றாக அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.