2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய நிதிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், எதற்கு வரி குறைக்கப்பட்டு உள்ளது, எதெற்கெல்லாம் வரிகள் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி தற்போது காணலாம்..

- தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை.

- வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை. உச்சவரம்பு 2.5 லட்சம் ரூபாயாகவே தொடரும்.

- மொபைல் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி வரியை 7.5 சதவீதமாக குறைக்க முடிவு.

- குடைகள் மீதான வரி 20 சதவீதம் உயர்த்தப்படும்.

- ஆடை தயாரிப்பு, தோல் பொருட்கள் தயாரிப்பு உபகரணங்களுக்கு வரி குறைப்பு.

- நாட்டின் மூலதனச் செலவுகள் ரூ.7.5 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

- மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகள் வரை வட்டியில்லாமல் ரூ.1 லட்சம் கோடி கடன் வழங்க முடிவு.

- இந்த ஆண்டுக்கான நிதி பற்றாக்குறை 6.9 சதவீத அளவிலும் 2023 ஆண்டுக்கான நிதி பற்றாக்குறை 6.4 சதவீதஅளவிலும் இருக்கும் என்றும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.

- மிக முக்கியமாக, மத்திய அரசு ஊழியர்களை போலவே மாநில அரசு ஊழியர்களுக்கும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சலுகை அறிவிக்கப்படும் என்றும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

- அரசு ஊழியர்களுக்கான வரிச்சலுகை 14 சதவீதமாக உயர்வாகவும், கூட்டுறவு சங்கங்களுக்கான வரிகள் 15 சதவீதமாக குறைவாகவும் இருக்கும் என்றும், அறிவிக்கப்பட்டு உள்ளது.

- ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

- உள்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வரிச்சலுகைகள் மார்ச் 2023 வரை நீட்டிப்பு.

- ராயல்டி மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு சில விதிகளுக்கு உட்பட்டு வரி விலக்கு அளிக்கப்படும்.

- வருமான வரி சோதனையின்போது கண்டுபிடிக்கப்படும் கணக்கில் காட்டப்படாத சொத்துகளுக்கான சலுகைகள் ரத்து செய்யப்படும்.

- கொரோனா காலகட்டத்திலும் ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் ரூ.1.40 லட்சம் கோடி வசூலித்து சாதனை.

- பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள் மற்றும் சில குறிப்பிட்ட ரசாயன பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டு உள்ளது.

- அதாவது, வைரங்கள், ரத்தினங்கள் மீதான சுங்க வரி 5 சதவீதமாக குறைக்கப்படும்.

- மின்சார வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படும்.

- இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் உபகரணங்களுக்கு வரி குறைப்பு.

- கிரிப்டோ கரன்சி மூலம் ஈட்டப்படும் வருவாய் மீது 30 சதவீதம் வரி விதிப்பு.

- கூட்டுறவு சங்கங்களுக்கான கூடுதல் கட்டணம் 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்படும்.

- பாதுகாப்பு துறைக்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் 68 சதவீத வாங்கப்படும்.

- திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்வோருக்கு 2 ஆண்டுகள் அவகாசம்.

- கூடுதல் வருமானத்தை கணக்கில் காட்டி கூடுதல் வரி செலுத்த விரும்புவோருக்கு திருத்தப்பட்ட கணக்கு தாக்கல் வசதிகள் உண்டு.

- ரிசர்வ் வங்கி வாயிலாக டிஜிட்டல் பணம் நடைமுறை விரிவுபடுத்தப்படும். 

- டிஜிட்டல் பணத்திற்கு என்று புதிய மத்திய வங்கி ஏற்படுத்தப்படும்.

-  துருப்பிடிக்காத இரும்பு பொருட்கள் மீதான வரி குறைப்பு.

-  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கூடுதல் வரி குறைப்பு.