நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதி நிலை அறிக்கையை 4 வது முறையாக இன்று தாக்கல் செய்து உள்ளார்.

நாடாளுமன்றத்தில் சுமார் 1.30 மணி நேரம் மத்திய பட்ஜெட் 2022-2023 உரையை வாசித்து நிறைவு செய்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்..

- நீர்ப்பாசன திட்டங்களுக்காக 8.7 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

- விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலைக்காக 2.3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

- 3.8 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க 60,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

- வட கிழக்கு மாநிலங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

- பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்திற்கு 48,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

- வீடில்லாத 18 லட்சம் பேருக்கு 2023 ஆம் ஆண்டுக்குள் வீடுகள் கட்டித்தரப்படும்

- போக்குவரத்து கட்டமைப்பு துறையின் மேம்பாட்டிற்காக 20,000 கோடி ரூபாயில் புதிய திட்டம்

- சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்க 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு 19,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகள் வரை வட்டியில்லாமல் ரூ.1 லட்சம் கோடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

- நாட்டின் மூலதனச் செலவுகள் ரூ.7.5 லட்சம் கோடியாக அதிகரிப்பு.

- 2022-2023 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த கடன் 22.8 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்ப்பு.

- ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து 4 வது மாதமாக 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது.

- 2022 ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் 1.40 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.

-  மாநில அரசுகளுக்கு உதவ 1,00,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- அரசின் மூலதன செலவுகள் 2022-23ல் 7.50 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிப்பு.

- இப்படியாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் சுமார் 1.30 மணி நேர பட்ஜெட் உரையை வாசித்து நிறைவு செய்தார்.