பீகாரில் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில்  திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  ரயில் கொளுந்துவிட்டு எரியும் வீடியோ வெளியாகி பதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

fire accident

பீகார் மாநிலம்  மதுபானி மாவட்டத்தில் உள்ள  மதுபானி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிந்த  ஸ்வதந்தரதா சேனானி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை   திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயிலின்  5 பெட்டிகளில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில்  வெளியாகி காண்போரை  பதபதைக்க வைத்துள்ளது.  ரயிலில் ஆட்கள் யாரும் இல்லாமல் காலியாக இருந்ததால்  உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர்ரென்று தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்ததை அடுத்து, ரயில் நிலையத்தில் இருந்தவர்கள்  தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.  பின்னர் தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர்,தீயை முழுவதுமாக அணைத்தனர்.  மேலும் இந்த சம்பவம் தொடர்பாக  வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர்,  நின்று கொண்டிருந்த ரயிலில், அதுவும் ஆட்கள் யாரும் இல்லாத ரயிலில் எவ்வாறு  தீ பற்றி இருக்கும் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.