சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர், ஆண் நண்பர் ஒருவருடன் டேட் நைட் சென்றதாக புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த புகைப்படங்கள் பற்றிய செய்திகளும் ஒவ்வொன்றாக உலா வந்துகொண்டிருக்கின்றன.

“சச்சின் டெண்டல்கரின் மகள் சாராவுடன் காதல்” என்று, கடந்த காலங்களில் தொடர்ச்சியாக கிசுகிசுப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக  இளம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில், கடந்த மே மாதம் விளக்கம் அளித்திருந்தார். ஆனாலும், அவர்களைப் பற்றிய கிசுகிசுக்கள் தொடர்ந்து வந்துக்கொண்டு தான் இருக்கின்றன.

இந்த கிசுகிசுக்கு எல்லாம் வித்திட்டதே, சாரா டெண்டுல்கரின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று தான். 

அதாவது, கடந்த சில ஐபிஎல் சீசனின் போது, அபுதாபியில் கே.கே.ஆர். அணிக்கு - மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி நடைபெற்றது. அப்போது, ஷுப்மன் கில் டைவ் அடித்து செய்த ஃபீல்டிங்கை டிவியில் ஃபோட்டோ எடுத்து, அந்த ஃபோட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாரா டெண்டுல்கர், பதிவிட்டு அவற்றுடன் சில ஹார்ட்டுகளையும் பறக்க விட்டிருந்தார். 

இந்த இன்ஸ்டாகிராம் பதிவும், அதில் இருந்த ஹார்டின்களுமே இவர்களது கிசுகிசுகளுக்கு காரணமாக அமைந்து போனது.

அதன் தொடர்ச்சியாக, இந்த கிசுகிசுக்களை உறுதிப்படுத்தும் வகையில், அவர்கள் இருவரும் தங்களுடைய சில புகைப்படங்களை தனித்தனியே பகிரும்போது, ஒருவருக்கொருவர் கமெண்ட் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

குறிப்பாக, சாரா டெண்டுல்கர், தனது புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டு, "I Spy" என பதிவிட்டிருந்தார். அதே போலவே, ஷுப்மன் கில்லும் தனது புகைப்படத்தை பதிவிட்டு, அதே தலைப்பை கொடுத்து எமோஜியும் கூடவே போட்டிருந்தார். இதனையெல்லாம் கண்ட கிரிக்கெட் ரசிகர்கள், “சாராவும் - கில்லும் காதலிப்பதாக” கூறி வருகின்றனர். 

தற்போது, 23 வயதாகும் சாரா லண்டனில் மருத்துவம் படித்து உள்ளார். இவர் அன்றாட வாழ்வில் தான் செய்யும் சில விஷயங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில், சாரா சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட போட்டோஸ் தான், மீண்டும் அவர் தொடர்பான சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.

அதன்படி, சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர், ஆண் நண்பர் ஒருவருடன் “டேட் நைட்” சென்றதாக புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சாரா பகிர்ந்துள்ள அந்த புகைப்படத்தில், “ஆண் நண்பர் ஒருவருடன் இரவு நேரத்தில் டேட்டிங் செய்வது போலவும், அந்த ஆண் நண்பரின் கையை சாரா பிடித்துக்கொண்டு இருப்பது போன்றும்” அந்த போட்டோ இருக்கிறது.

இத்துடன், அந்த போட்டோவில் “நைட் டேட்டிங்” என்றும் சரா குறிப்பிட்டு உள்ளார். 

இதனை பார்த்த இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் கோபத்தில் இருப்பதாகவும், சிலர் இணையத்தில் கிசுகிசுக்களை தெரிக்கவிட்டு வருகின்றனர். 

ஆனால், இந்த புகைபை்படத்தின் உண்மை தன்மையை என்னவென்றால், அந்த புகைப்படங்களை சாரா தனது இன்ஸ்டாவில் மற்றொருவரின் கையை பிடித்துக்கொண்டிருப்பதுடன் பகிர்ந்துள்ளதைப் போலவே, மும்பை பெண் சிங்கரான கன்னிகா கபூரும் மற்றொரு கையை பிடித்துக்கொண்டு இருப்பதைப் போன்று, அவரது பதிவில் மற்றொரு போட்டோவையும் பகிர்ந்து உள்ளார்.

இதனால், அந்த போட்டோவில் இருப்பது சாராவின் ஆண் நண்பர் இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இதனால், சாராவின் “நைட் டேட்டிங்”கில் உடன் இருந்தது மும்பையைச் சேர்ந்த பிரபல பெண் பாடகர் கன்னிகா கபூர் தான் என்பதும் தற்போது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், சச்சின் மகள் சாராவை பற்றி தற்போது வந்த கிசுகிசுவும் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.