கிளினிக்லேயே பெண் டாக்டர் காதலனுடன் ஜாலியாக இருந்ததை, வெளியே காவலுக்கு நின்ற நர்ஸ் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து பணம் கேட்டு மிரட்டி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர், கல்யாணமாகி தனது கணவருடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த சூழலில் தான், அந்த பெண் டாக்டர் மும்பையில் தனியாக ஒரு கிளினிக் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.

அந்த கிளினிக்கிற்கு அந்த பெண் டாக்டரின் முன்னாள் காதலன் ஒருவர் அடிக்கடி அங்கு வந்து செல்வது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.

அத்துடன், அந்த காதலன் ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், அடிக்கடி தனது காதலியான அந்த பெண் டாக்டரை பார்க்க வரும்போதெல்லாம், இவர்கள் இருவரும் இந்த கிளினிக்கில் தான் அதிகம் நேரம் தனிமையில் சந்தித்து பேசி வருவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

அப்படி, அந்த காதலன் ஓமன் நாட்டில் இருந்து மும்பைக்கு வரும்போதெல்லாம், அந்த பெண் டாக்டருடன், அந்த கிளினிக்லேயே ஜாலியாக உல்லாசமாக இருப்பதுடன், அந்த கிளினிக்கின் வெளியே, அங்கு நர்சாக பணியாற்றும் ஒரு பெண்ணை, காவலுக்கு வைத்து விட்டு உள்ளே இவர்கள் இருவரும் ஜாலியாக இருந்து வந்திருக்கிறார்கள்.

ஆனால், இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த நர்ஸ், “பெண் டாக்டர், அவரது காதலனுடன் ஜாலியாக தனிமையில் இருப்பதை” தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்து வைத்து உள்ளார்.

இதனையடுத்து, அந்த வீடியோ கிளிபிங்சை, அந்த பெண் டாக்டருக்கு அனுப்பி வைத்து 5 லட்ச ரூபாய் பணம் கேட்டு பிளாக் மெயில் செய்து, அந்த நர்ஸ் மிரட்டி வந்திருக்கிறார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் டாக்டர், நான்கு நாட்கள் மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருந்தார்.

அந்த நேரத்தில், அந்த நர்ஸ் தனது இன்னொரு ஆண் நண்பருடன் சேர்ந்து அந்த பெண் டாக்டரை மீண்டும் பயங்கரமாக மிரட்டி பணம் கேட்டிருக்கிறார். 

இதனால், பயந்து போன அந்த பெண் டாக்டர், இது பற்றி தனது வீடு அமைந்திருக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், அந்த நர்ஸ் மீது துணிச்சலுடன் புகார் அளித்துள்ளார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த நர்ஸையும் அவரின் ஆண் நண்பரையும் அதிரடியாக கைது செய்தனர். அத்துடன், அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் கேமரா, மெமரி கார்டையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.