தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக அனைத்து முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடித்து காமெடியில் கலக்கி வரும் தொடர்ந்து, தளபதி விஜய்யுடன் இணைந்து பீஸ்ட், தல அஜீத்துடன் வலிமை, சிவகார்த்திகேயனுடன்  அயலான், விஜய் சேதுபதியுடன் கடைசி விவசாயி, விஷாலுடன் வீரமே வாகை சூடும் உள்ளிட்ட படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.

நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கதாநாயகனாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள யோகிபாபு, பொம்மை நாயகி , காசேதான் கடவுளடா, பன்னிக்குட்டி உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

இதனையடுத்து யோகிபாபு  நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. மலையாள சினிமாவின் பிரபல இயக்குனரான ரெஜிஷ் மிதில்லா இயக்கத்தில் தயாராகும் புதிய ஃபேண்டஸி ட்ராமா திரைப்படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார்.

யோகி பாபு உடன் இணைந்து நடிகர்கள் ரமேஷ் திலக் மற்றும் கருணாகரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. விரைவில் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.