கஞ்சாவுக்கு அடிமையான மகனை, அவரது தாயார் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடி வெளுத்து வாங்கிய நிலையில், மகனின் கண்ணில் மிளகாய் பொடி தூவி தண்டனை வழங்கி சம்பவம், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் தெலங்கானா மாநிலத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் இருக்கும் கொத்தாடா கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் ஒருவன், அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகிறான்.

இந்த 15 வயது சிறுவன், அந்த பகுதியில் உள்ள தவறான நபர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு ஊர் சுற்றி வந்த நிலையில், திடீரென்று அந்த சிறுவன் கஞ்சாவுக்கு அடிமையாகி உள்ளார்.

இதனையடுத்து, அந்த சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் கட் அடித்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் தனது பெற்றோர் பேச்சையும் கேட்காமலும் வெற்றியாக ஊர் சுற்றி திரிந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படியாக, ஒரு நாள் முழுவதும் கஞ்சா போதையில் இருக்கும் தனது மகனை திருத்த நினைத்த அந்த சிறுவனின் தாயார், பல்வேறு முயற்சிகளை மகனுக்கா மெனுக்கெட்டு எடுத்திருக்கிறார். ஆனால், அது எதுவுமே மகனை திருத்த உதவவில்லை. 

இப்படி, அந்த தாயார் எடுத்த எல்லா முயற்சிகளும் படுதோல்வி அடையவே மிகவும் வெறுத்துப்போன அந்த தாயார், “எனது மகனை கஞ்சா போதையில் இருந்து மீட்டு, எப்படியாவது அவனை திருத்த வேண்டும்” என்று, அங்குள்ள போலீசாரிடம் பலமுறை உதவி கேட்டிருக்கிறார்.
 
அப்போதெல்லாம், போலீசார் அந்த சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்து, தங்களது பாணியில் பலமுறை அறிவுரை வழங்கி, மிரட்டி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

என்றாலும், அந்த சிறுவன் திருந்தாமல், தொடர்ந்து கஞ்சா போதைக்கு அடிமையாகி வந்திருக்கிறான்.

இதனால், மிகவும் வெறுத்துப்போன அந்த தாயார், “தன்னுடைய மகனை எப்படியாவது திருத்தி, போதையிலிருந்து மீட்டு அவனுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்” என்று, தீர்மானமாக முடிவு செய்திருக்கிறார்.

அதன்படி, தனது மகனை தனது வீட்டிற்கு எதிரில் உள்ள மின் கம்பம் ஒன்றில் கட்டிப்போட்டு தர்ம அடி கொடுத்திருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, தனது மகனின் கண்ணில் மிளகாய் துளை கொட்டி இருக்கிறார். இதனால், அந்த சிறுவனுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு, அலறி துடித்திருக்கிறான். 

அப்போது, அந்த வலியை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த மகன், தனது தயாாரிடம் அழுது மன்றாடி “இனிமேல் நான் கஞ்சா பயன்படுத்த மாட்டேன்” என்று, உறுதிமொழி கொடுத்திருக்கிறான்.

இதனையடுத்து, தனது மகனின் கண்ணீல் தண்ணீரை அடித்து, அவனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளார். தற்போது, அந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கஞ்சாவுக்கு அடிமையான மகனை அதிலிருந்து மீட்க, அந்த சிறுவனின் தாய், மகனை கம்பத்தில் கட்டி வைத்து கண்ணில் மிளகாய் பொடி தூவிய சம்பவம், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.