தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.இவர் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார்.செல்வராகவன்,யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ,அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின்  இரண்டு பாடல்கள் வெளியாகி இன்டர்நெட்டை கலக்கி வருகின்றன.உலகளவில் இந்த படம் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.இந்த படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி பிரம்மாண்டமாக ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.இந்த படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்றியுள்ளது.

தற்போது இந்த படத்தின் ஹிந்தி ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.ஹிந்தியில் Raw என்று இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.பாலிவுட்டில் பிரபல நாயகன் வருண் தவான் இந்த ட்ரைலரை வெளியிட்டுள்ளார்.ஹிந்தியிலும் இந்த ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.