தளபதி 66-ல் விஜய்க்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா ! உற்சாகத்தில் ரசிகர்கள்
By Aravind Selvam | Galatta | April 05, 2022 16:21 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் படம் 2021 பொங்கலுக்கு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ஏப்ரல் 13ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
இதனை அடுத்து விஜய் நடிக்கும் படம் தளபதி 66.இந்த படத்தினை தோழா,மஹரிஷி போன்ற வெற்றி படங்களை இயக்கிய வம்சி பைடிபைலி இயக்குகிறார்.தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.இந்த படத்தின் ஷூட்டிங் மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்ற தகவலும் பரவலாக பரவி வருகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் சில வாரங்களில் தொடங்கவுள்ளது என்ற தகவல் கிடைத்து வருகிறது.தற்போது இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என்ற அதிகாரபூர்வ தகவலை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்,ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.முதல் முறையாக ராஷ்மிகா விஜயுடன் ஜோடி சேர்வதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Wishing the talented and gorgeous @iamRashmika a very Happy Birthday !
— Sri Venkateswara Creations (@SVC_official) April 5, 2022
Welcome onboard #Thalapathy66@actorvijay @directorvamshi#RashmikaJoinsThalapathy66 pic.twitter.com/zy2DeieUFe
Thalapathy Vijay's TV interview with Nelson - here is the latest exciting promo!
05/04/2022 11:39 AM