தனது விடாமுயற்சியாலும் தனது வித்தியாசமான கதைத்தேர்வின் மூலமும்  தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து அசத்தி வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் ஐஸ்வர்யா.

ஹீரோயினாக மட்டுமல்லாமல் தனது கதாபாத்திரத்துக்கு வெயிட்டான படங்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து விட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்து அசத்தி வருகிறார்.

இவர் நடிப்பில் அடுத்த்தாக துருவ நட்சத்திரம்,டிரைவர் ஜமுனா,மோகன்தாஸ்,தீயவர் கொலைகள் நடுங்க,தி கிரேட் இந்தியன் கிட்சன்  மற்றும் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இவரது திட்டம் இரண்டு,பூமிகா உள்ளிட்ட படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.தற்போது இவரது மயமாகி விட்டது அது செயலிழந்ததா இல்லை சஸ்பெண்ட் செய்யப்பட்டதா என தெரியவில்லை யாரோ ஹேக் செய்துள்ளனர்,என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.