தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக அறிமுகமாகி அடுத்தடுத்து தனது வித்தியாசமான கதைதேர்வினால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் ஆர்யா.சோலோ ஹீரோவாக மட்டும் இல்லாமல் பல முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்தும் அசத்தியுள்ளார்

இவர் நடித்த டெடி,எனிமி,சர்பட்டா பரம்பரை,அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் கடைசியாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதனை அடுத்து கேப்டன் உள்ளிட்ட சில முக்கிய படங்களில் நடித்து அசத்தி வருகிறார் ஆர்யா.

கேப்டன் படத்தில் டெடி பட இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் உடன் மீண்டும் இணைந்துள்ளார் ஆர்யா.இந்த படத்தினை திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் தி ஷோ People இணைந்து தயாரித்துள்ளனர்.ஐஸ்வர்யா லக்ஷ்மி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.சிம்ரன்,ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.வித்தியாசமான இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த போஸ்ட்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்