உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 78 வயதான மூதாட்டி ஒருவர் தனது சொத்துக்களை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பெயருக்கு மாற்றி கொடுத்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் வசித்து வருபவர் 78 வயதான புஷ்பா முன்ஜியால். இவர் தனக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் 10 டோலா தங்கம் ஆகிய அனைத்து சொத்துக்களின் உரிமையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு அளித்து உயில் எழுதியுள்ளார்.

இந்நிலையில் டேராடூன் நீதிமன்றத்தில் புஷ்பா முன்ஜியால் தனது சொத்துக்களின் உரிமையை ராகுல் காந்திக்கு அளித்து உயிலை தாக்கல் செய்தார். டேராடூன் மாநகராட்சி தலைவர் லால்சந்த் சர்மா இது தொடர்பாக கூறுகையில், உத்தரகாண்ட் காங்கிரஸின் முன்னாள் தலைவர் பிரீதம் சிங் வீட்டில் புஷ்பா முன்ஜியால் தனது சொத்துக்களின் உரிமைகளை ராகுல் காந்திக்கு மாற்றி கொடுத்த உயிலை கொடுத்தார் என்று தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து மேலும் ராகுல் காந்திக்கு தனது சொத்துக்களை கொடுத்தது குறித்து மூதாட்டி புஷ்பா முன்ஜியால் செய்தியாளர்களிடம கூறுகையில், ராகுல் காந்தி மற்றும் அவரது யோசனைகள் நாட்டுக்கு அவசியம். ராகுல் காந்தியின் எண்ணங்களால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அதனால்தான் எனது சொத்துக்களை அவருக்கு வழங்குகிறேன் என்று தெரிவித்தார்.