தங்களின் வித்தியாசமான தொடர்கள் மூலமாகவும் நிகழ்ச்சிகள் மூலமாகவும் தமிழகத்தின் முன்னணி டிவி சேனல்களில் ஒன்றாக வளர்ந்திருப்பது ஜீ தமிழ்.இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி செம ஹிட் அடித்து வரும் தொடர் கோகுலத்தில் சீதை.இந்த தொடரில் ஆஷா கௌடா ஹீரோயினாக நடித்து வருகிறார்.நடன இயக்குனர் நந்தா இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஆதரவோடு சூப்பர்ஹிட் தொடராக அவதரித்துள்ளது.700 எபிசோடுகளை நெருங்கி பெரிய வெற்றி தொடராக இந்த தொடர் உருமாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடர் நிறைவடையப்போவதாக சில தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவி வந்தன.அந்த தகவல் வெறும் வதந்தி தான் தொடர்ந்து பல விறுவிறுப்பான எபிசோடுகளுடன் வருகிறோம் என்று நாயகன் நந்தா தனது இன்ஸ்டாகிராம் லைவில் தெரிவித்துள்ளார்.