இரண்டு பீஸ்ட்களுடன்....வைரலாகும் விக்ரம் படக்குழுவின் புது புகைப்படம் !
By Aravind Selvam | Galatta | April 04, 2022 18:33 PM IST

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தி நடித்த கைதி படத்தினை இயக்கினார்.
இந்த படமும் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்றது.வளர்ந்து வரும் முன்னணி இளம் இயக்குனர்களில் ஒருவராக தவிர்க்க முடியாத ஒரு இடத்தினை பிடித்தார் லோகேஷ்.அடுத்ததாக தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தினை இயக்கினார்.இந்த படமும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்தார் லோகேஷ்.
மாஸ்டர் படத்திற்கு அடுத்ததாக கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தினை இயக்கவுள்ளார் லோகேஷ்.ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.ஃபஹத் பாசில்,விஜய்சேதுபதி,நரைன்,அர்ஜுன் தாஸ்,காளிதாஸ் ஜெயராம்,பிக்பாஸ் ஷிவானி,மைனா,மஹேஸ்வரி VJ உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படம் ஜூன் 3ஆம் தேதி பிரம்மாண்டமாக 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.இந்த படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளனர்.தற்போது படத்தின் இயக்குனர் லோகேஷ் மற்றும் முக்கிய நடிகர்களில் ஒருவரான பஹத் பாசில் , இயக்குனர் குழுவில் முக்கிய நபரான ரத்னகுமார் உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர்.ஷூட்டிங் முடிந்த நிலையில் டப்பிங் மற்றும் அடுத்தகட்ட வேலைகள் குறித்த சந்திப்பாக இது இருக்கும் என்று தெரிகிறது.
One fine evening with the Powerhouse Fahad Fazil sir & @Dir_Lokesh sir. 🔥🥳#Vikram pic.twitter.com/cfrJDxubh9
— Rathna kumar (@MrRathna) April 3, 2022