“விவாகரத்து பெற்ற பிறகு, மனைவி கொண்டு வந்த சீதனத்திற்கு கணவர் குடும்பத்தினர் யாரும் உரிமை கொண்டாட முடியாது” என்று, நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு கூறியுள்ளது.

இந்தியாவின் சட்டங்கள் பெரும்பாலும், இந்தியாவிற்கே உரிய பண்பாட்டு கலாச்சாரங்களையும் பின்பற்றியும், அதனை போற்றும் விதமாகவே அமைந்து உள்ளன.

சில நேரங்களில், இந்திய கலாச்சாரங்கள் கை மீறி போவதுமுண்டு. அப்படி, எல்லை மீறும் சம்பவங்கள் இந்தியாவின் சில இடங்களில் அவ்வப்போது நடந்தாலும், அதற்கான தார்மீக உரிமைகளும் சில நேரங்களில் நிலைநாட்டப்படுவதுண்டு.

இப்படியான ஒரு சம்பவத்தில் தான், பாதிக்கப்பட்டவருக்கு தார்மீக உரிமையை நீதிமன்றம் பெற்றுத் தந்து உள்ளது.

அதாவது, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஒரு வித்தியாசமான வழக்கு ஒன்று வந்தது.

அந்த வழக்கில், பெங்களூருவை சேர்ந்த ஒரு இளைஞருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இரு வீட்டார் முறைப்படி திருமணம் செய்து வைத்து உள்ளனர்.

இருவரும் கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் இவர்களுக்குள் அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதனால், அந்த பெண்ணுக்கு விவாகரத்து வழக்கும் போது, “ஜீவனாம்சம் வழங்கவும்” நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

இந்த நிலையில் தான், அந்த பெண் தனது திருமணத்தின் போது, கணவருக்கு சீதனமாக 9 லட்சம் ரூபாய் ரொக்க பணமும், தங்க நகைகள் மற்றும் பொருட்களையும் வரதட்சனையாக கொடுத்திருந்தார். ஆனால், “திருமணத்தின் போது கொடுத்த நகை, பணத்தை அந்த மாப்பிள்ளை வீட்டார் திரும்ப கொடுக்க முடியாது என்றும், அது எங்களுக்கே சொந்தம்” என்றும், அந்த பெண்ணின் கணவர் குடும்பத்தினர் உரிமை கொண்டாடி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், இது குறித்து பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை எதிர்த்து அந்த கணவனின் குடும்பத்தினர் சார்பிலும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணை அனைத்தும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நடைபெற்று வந்தது.

இப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “விவாகரத்து பெற்ற பிறகு, பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுப்பது சரியானது தான்” என்று, சுட்டிக்காட்டினார்.

அத்துடன், “விவாகரத்து ஆன பிறகு திருமணத்தின் போது அந்த பெண் தனது பெற்றோர் வீட்டில் இருந்து கொண்டு வந்த சீதனத்திற்கு கணவர் குடும்பத்தினர் உரிமை கொண்டாட முடியாது” என்றும், அதிரடியாக தீர்ப்பை வழக்கினார். 

மேலும், “ஜீவனாம்சத்துடன், 9 லட்சம் ரூபாய் ரொக்கமும், திருமணத்திற்கு பெண் வீட்டார் தந்த நகைகள் உள்ளிட்ட பிற பொருட்களை அப்படியே திரும்ப பெண் வீட்டாரிடமே ஒப்படைக்க வேண்டும்” என்றும், அதிரடியாக உத்தரவிட்டார். 

இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வரும் நிலையில், இந்த தீர்ப்பு பெண்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.