தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குனர் நெல்சன் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் கடந்த ஆண்டு (2021) வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

கடைசியாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இந்த ஆண்டு (2022) தமிழ் புத்தாண்டு வெளியீடாக ரிலீஸானது. அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கைகோர்த்தார் நெல்சன். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் #தலைவர்169 படத்திற்கு ஜெயிலர் பெயரிடப்பட்டுள்ளது. இன்று (ஜூன் 17) ஜெயிலர் படத்தின் டைட்டிலை அறிவிக்கும் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது.

முன்னதாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் முதல் படமாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான கோலமாவு கோகிலா திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. குட் லக் ஜெர்ரி என்ற பெயரில் தயாராகியுள்ள இத்திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இயக்குனர் சித்தார்த் சென்குப்தா இயக்கத்தில் உருவாகியிருக்கும் குட் லக் ஜெர்ரி படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ், கலர் எல்லோ புரோடக்சன்ஸ், மஹாவீர் ஜெயின் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்நிலையில் குட் லக் ஜெர்ரி திரைப்படம் வருகிற ஜூலை 29ஆம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்-ல் ரிலீஸ் ஆக உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Apni kismat banane nikli hai Jerry, good luck nahi bolenge? #GoodLuckJerry streaming from 29th July only on #DisneyPlusHotstarMultiplex pic.twitter.com/PdydU8fXYN

— Disney+ Hotstar (@DisneyPlusHS) June 17, 2022