தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது முதல் படமான பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரை உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர். இதனையடுத்து நடிகர் தனுஷுடன் கைக்கோர்த்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கர்ணன்.

கர்ணன் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக தயாராகி வருகிறது மாமன்னன் திரைப்படம். ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஃபகத் பாசில், வைகைபுயல் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் மாமன்னன் திரைப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, செல்வா.R.K படத்தொகுப்பு செய்கிறார். மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு தளத்தில் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் அவர்களின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது. இந்தப் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனர் மாரிசெல்வராஜ். ஃபகத் பாசில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு மற்றும் படக்குழுவினர் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படங்கள் இதோ…
 

#GalattaExclusive: Acclaimed Cinematographer #TheniEswar celebrated his birthday recently at the #Maamannan shooting spot in Salem. 🎥@Udhaystalin, #Vadivelu, @mari_selvaraj and #FahadhFaasil were present in this joyous occasion 🎂🎉 pic.twitter.com/IqPw69KKYS

— Galatta Media (@galattadotcom) June 16, 2022