இந்திய திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த எந்திரன் திரைப்படத்தை தனது முதல் திரைப்படமாக தயாரித்தது. இதனையடுத்து 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தளபதி விஜய் நடித்த சர்க்கார் படத்தில் தயாரித்தது.

தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான பேட்ட, ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3, சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை, இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடைசியாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியானது.

அடுத்ததாக இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம், இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம் மற்றும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்169 ஆகிய திரைப்படங்கள் தற்போது தயாராகி வருகின்றன.

இந்நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் வகையில் நாளை (ஜூன் 16) சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் முக்கிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த பதிவில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் பெரிய நட்சத்திரம் இருப்பதால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை குறிப்பதாகவும் தலைவர்169 திரைப்படத்தின் அப்டேட் வெளிவர இருப்பதாகவும் சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. உண்மையான சர்ப்ரைஸ் என்ன என்பது நாளை காலை 11 மணி அளவில் வெளியாகிவிடும். சன் பிக்சர்ஸின் அந்த அறிவிப்பு இதோ…
 

Update Tomorrow at 11am! pic.twitter.com/s4a4bi1HoR

— Sun Pictures (@sunpictures) June 16, 2022