மத்திய அரசு அறிவித்துள்ள “அக்னிபத் திட்டத்திற்கு” கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுட்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் எல்லாம் ஒன்று திரண்டு, ஒரு விசயத்திற்காக ஒன்றாக ஒரே நேரத்தில் உயர்த்தி குரல் கொடுக்கிறார்கள் என்றால், அந்த விசயத்தில் நியாயமும், உண்மையும் இல்லாமல் இல்லை.

சில நேரங்களில் நம்மை ஆளும் அரசாங்கம் கூட, அந்த அரசு அதிகாரிகளின் தவறான புரிதால் காரணமாக, ஒரு சில திட்டங்களை அறிவித்து, பிறகு பின்வாங்குவது உண்டு.

அந்த வகையில் தான் பாஜக தலைமையிலான மத்திய அரசு, சமீபத்தில் “அக்னிபத்” என்னும் திட்டத்தை அறிவித்தது.

இதனையடுத்து தான், நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் ஒன்று திரண்டு, மத்திய அரசு அறிவித்த “அக்னிபத்” திட்டத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதாவது, மத்திய அரசு அறிவித்த “அக்னிபத் யோஜனா” என்னும் திட்டத்தின் படி, அக்னிவீரர்களாக சேருவோரின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு 3 ஆண்டு சிறப்பு பட்டப்படிப்பை” மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்து உள்ளது. 

அதன்படி,  “3 ஆண்டு சிறப்பு பட்டப்படிப்பை படிக்கும் இளைஞர்கள், இந்திய ஆயுதப்படைகளுக்கான ஆள்சேர்ப்பு திட்டத்தில், மிக குறுகிய கால ராணுவ வீரராக, அதாவது வெறும் 4 ஆண்டுகள் மட்டுமே,இந்த அக்னிபாத் திட்டத்தின் மூலம் பணியில் சேரலாம்” என்பது, மத்திய அரசின் திட்டமாக உள்ளது.

குறிப்பாக, “3 ஆண்டுகள் இதற்கான படிப்பை படித்து முடித்த பிறகு, வெறும் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே பணியில் இருக்க முடியும் என்றால், அந்த 4 ஆண்டுகள் பணி முடிந்த பிறகு நாங்கள் என்ன செயய வேண்டும்?” போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மத்திய அரசைப் பார்த்து எதிர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அதன்படி, மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, பீகார் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் அந்த மாநில இளைஞர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் போது, பீகாரை சேர்ந்த குல்ஷன் குமார் என்ற இளைஞர் பேசும் போது, “வெறும் 4 ஆண்டுகள் நாங்கள் பணி புரிந்தால், அதற்கு பிறகு வேறு வேலைகளுக்கு தேடி சென்று படிக்க வேண்டும்” என்றும், அவர் மத்திய அரசின் திட்டத்தை குறையாக கூறி உள்ளார்.

மேலும், மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு எதிராக பீகார் மாநிலம் முங்கர், ஜெஹானாபாத் ஆகிய பகுதிகளில் இளைஞர்கள் முன்னதாக சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, சாலையில் நின்ற பேருந்துகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். 

இவற்றுடன், அங்கு நின்ற சில வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த போராட்டக்காரர்கள், மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழங்கங்களையும் எழுப்பினர்.

அதே போல், மத்திய அரசுக்கு எதிரான இந்த போராட்டம் தமிழகத்திலும் எதிரொலித்தது. அதன் படி, தமிழகத்தில் வேலூர் மாவட்டம் ஆட்சிய அலுவலகம் எதிராக ஒன்று திரண்ட 100 க்கும் மேற்குபட்ட இளைஞர்கள், “அக்னிபத் யோஜனா” திட்டத்தை எதிர்த்து, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.